வார்த்தையை விட்ட விஜயா.. எரிமலையாய் வெடித்த மீனா..! பாவமாய் நின்ற முத்து..!

by Akhilan |
வார்த்தையை விட்ட விஜயா.. எரிமலையாய் வெடித்த மீனா..! பாவமாய் நின்ற முத்து..!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதிக்காக அவர் அம்மா நகைகளை எடுத்து வருகிறார். இதில் 50 சவரன் இருக்கு என் பொண்ணுக்கு கொடுக்க வேண்டியது என்கிறார். ஆனால் அண்ணாமலை இது வரதட்சணை வாங்குற மாதிரி இருக்கு எனச் சொல்கிறார். உடனே ஸ்ருதி அம்மா உங்க மத்த மருமகள்கள் போட்டுக்கிட்டு வந்து இருப்பாங்கள என்கிறார்.

உடனே ரோகினிக்கு அதிர்ச்சி ஆகிறார். மீனா கவலையாகி விடுகிறார். விஜயா ரோகினி அப்பா கல்யாணத்துக்கு வரலை. ஆனா பொங்கலுக்கு வருவார். 100, 150 சவரன் போடுவாரு. மலேசியா வியாபாரம் அதான். ஆனா மீனாவுக்கு எதுவும் போடலை. நாங்க தான் போட்டு கூட்டிக்கிட்டு வந்தோம். இவர் ரிட்டயர்ட் ஆகுற ஒருநாளைக்கு முன்னாடி ஓட்டுற ரயில் வந்து மீனா அப்பா விழுந்தாரு.

இதையும் படிங்க: டங்கி ட்விட்டர் விமர்சனம்: 3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி சம்பவம்.. செம ஷாருக்கான்!

அதான் மீனாவுக்கு கல்யாணம் ஆச்சு. இல்லைனா இன்னும் கல்யாணம் கூட ஆகி இருக்காது என அபத்தமாக பேசுகிறார். இதில் மீனா வருந்தி ரூமுக்குள் சென்று விடுகிறார். பின்னர் சாமி ரூமில் அமர்ந்து கவலையாக இருக்கும் மீனாவை வந்து வேலை அப்படியே இருக்காது. இங்க என்ன உட்கார்ந்து இருக்க என்கிறார். இதனால் கடுப்பாகும் மீனா ஏன் இந்த வீட்டில நான் மட்டும் தான் இருக்கேனா என்கிறார்.

உடனே விஜயா என்ன எதிர்த்து பேசுற என்கிறார். நீங்க சொல்றத கேட்டுக்கிட்டு அமைதியா இருக்கணுமா என மீனா கேட்க ஸ்ருதி, ரவி அங்கு வந்து விடுகின்றனர். உடனே ரோகினி என்ன ஆண்ட்டிக்கு கிட்ட இப்படி பேசுற என்கிறார். அதே நேரத்தில் அண்ணாமலை அங்கு வந்து விட மனோஜ் இப்போ எதுக்கு இந்த பொண்ணு கத்திக்கிட்டு இருக்கு என்கிறார்.

என்ன எது வேணா பேசுங்க எங்க அப்பாவை ஏன் பேசுறீங்க என்கிறார். மீனா பக்கம் தான் நியாயம் இருப்பதாக ரவி, ஸ்ருதி கூறுகின்றனர். உடனே விஜயா இல்லம்மா இங்க நடந்தது உனக்கு தெரியாது எனக் கூற என்ன உண்மையை சொல்லிட்டீங்க. அப்போ நடந்த எல்லா உண்மையை சொல்லுங்க என்கிறார். இதில் விஜயா ஷாக்காகி நிற்கிறார். ஸ்ருதி ஆண்ட்டி நீங்க செஞ்சது தப்பு என்கிறார்.

இதையும் படிங்க: எழில் பிரச்னையை சொல்ல முடியாமல் தவிக்கும் பாக்கியா… வெடித்த செழியன் பிரச்னை..!

உடனே விஜயா கடுப்பாகி என்ன இல்லாததை சொல்லிட்டேன். இவ என்ன நகையா போட்டுக்கிட்டு வந்தா இவ அப்பன் சேர்த்து வச்சிட்டா செத்து போனான் என்கிறார். இப்போ என்ன உங்களுக்கு நகை தானே பிரச்னை எனக் கேட்டு விட்டு மீனா ரூமுக்குள் செல்கிறார். அண்ணாமலை விஜயாவை அதட்டுகிறார். நான் ஒழுங்கா தான் பேசுனேன். அவ தான் சண்டைக்கு நிக்கிற இப்போ கேட்டதுல என்ன ரோஷம் வந்து ரூமுக்கு போயிட்டா எனக் கூறுகிறார்.

அந்த நேரத்தில் மீனா வந்து கதவை திறந்து நகையை டேபிளில் வைக்கிறார். அந்த நேரத்தில் முத்து அங்கு வந்துவிட விஷயத்தினை தெரிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறார். உடனே விஜயா என்ன நல்ல நகையை கொடுத்துட்ட மாதிரி பேசுற எனக் கேட்க உங்களை பத்தி தெரியும் எனக் கூறி தங்க தாலியை கூட அவுத்து கொடுத்து விடுகிறார். கழுத்தில் மஞ்சக்கிழங்குடன் இனி நகையை வாங்கினால் அது என் புருஷன் காசில் இருந்துதான் எனக் கூறிவிட்டு சென்று விடுகிறார்.

ரூமுக்குள் சென்று முத்து நான் செய்றேன். ஆனா இனி சவால் விடும்போது என்னையும் கேட்டுக்கோ எனப் புலம்பிக்கொண்டு இருக்கிறார். பார்வதியை பார்க்க வரும் விஜயா ரூமுக்குள் சென்று படுத்து இருக்கிறார். பின்னர் மீனா பிரச்னையை அவரிடம் கூறும்போது எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: மனுஷனை அந்த அளவுக்கு ஓட்டுனாங்க!.. வெள்ளத்துல இறங்கி மக்களை எப்படி காப்பாத்துறாரு மாரி செல்வராஜ்!

Next Story