ரவிக்கு செம டோஸ் விட்ட முத்து… மீண்டு வந்த அண்ணாமலை..! மாமனாரை பார்த்த மீனா..!

by Akhilan |
ரவிக்கு செம டோஸ் விட்ட முத்து… மீண்டு வந்த அண்ணாமலை..! மாமனாரை பார்த்த மீனா..!
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து காரை மற்றும் விஜயா நகைகளை வைத்து அண்ணாமலைக்கு ஆபிரேஷன் தொடங்குகிறது. குடும்பமே பதறி நிற்கும் நேரத்தில் ரவி மருத்துவமனைக்கு வருகிறார். அப்பாவுக்கு என்ன ஆச்சு. நான் அவரை அப்பாவ பார்க்கணும் என்று அழுகிறார்.

இதையடுத்து, முத்து, விஜயா, மனோஜ் உட்பட அனைவரும் உன்னால தான் அவருக்கு இப்படி ஆச்சு. நீ பார்க்க முடியாது என திட்டுகின்றனர். ரோகினி நீங்க ஏன் இங்க வந்தீங்க என கேட்க நான் சண்டை போட வரலை அண்ணி அப்பாவை பார்க்கணும் என்கிறார்.

இதையும் படிங்க: ஈஸ்வரியம்மா உங்க மகனுக்கு காசு கொடுக்குறது இருக்கட்டும்… என்ன செலவு பண்ணாருனு கேட்டீங்களாக்கும்..!

முத்துவிடம் நான் அப்பா ட்ரீட்மென்ட்டுக்கு பணம் எடுத்துட்டு வந்து இருக்கேன் என்கிறார். யாருக்கு வேண்டும் உன் பணம். என் காரை வித்திட்டேன். வித்தவரு போய் அப்பாவை காப்பாத்துனு சொன்னாரு. மெக்கானிக் கமிஷன் வேண்டாமுனு சொன்னாரு. அப்படி நல்ல மனசங்க இருக்காங்க என்ன சுத்தி என ரவியை அங்கிருந்து விரட்டுகிறார்.

அடுத்து அண்ணாமலை ஆபிரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்கின்றனர். ரோகினி மற்றும் விஜயா கோயிலுக்கு வேண்டிக்கொள்ள செல்கின்றனர். அதே கோயிலில் மீனாவும் அண்ணாமலைக்காக வேண்டிக்கொள்ள வந்து இருவரையும் பார்த்து விட்டு மறைந்து நின்று கொள்கிறார்.

இதையும் படிங்க: ‘ல்தகா சைஆ’ இருக்கா? இல்லையா? பிக்பாஸ் வீட்டுல புதுசா மலர்ந்த காதல் – செம ரொமான்ஸா இருக்கே

மருத்துவமனையில் அண்ணாமலைக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து விடுகிறது. இதையடுத்து நார்மல் வார்டுக்கு மாற்றி விடுகின்றனர். மனோஜ், முத்து வெளியில் கிளம்பி விடுகின்றனர். பரசுவின் உதவியுடன் அண்ணாமலையை வந்து பார்க்கிறார் மீனா. சாமியார் கொடுத்த கயிறையும் கட்டி விடுகிறார்.

அந்த நேரத்தில் முத்து, மனோஜ் ரூமுக்கு வருவதற்குள் மீனா வெளியே வந்து விடுகிறார். அடுத்து ரவி வீட்டுக்கு போய் ஸ்ருதியிடம் அப்பாவை என்ன யாரும் பார்க்க விடலை. என்னால தான் அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சு. எல்லாரும் வெறுத்து விட்டனர் என சொல்லி அழுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story