மீண்டும் முத்துவுக்கு தான் பிரச்னையா? ஸ்ருதி-ரவியை கூட்டிப்போக தயாராகும் அம்மா.. அப்பாடி!...

by Akhilan |
மீண்டும்  முத்துவுக்கு தான் பிரச்னையா? ஸ்ருதி-ரவியை கூட்டிப்போக தயாராகும் அம்மா.. அப்பாடி!...
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து ஷெட்டுக்கு வர நண்பர்கள் நீ தேவையில்லாமல் அந்த சிட்டி மேல கையை வச்சிட்ட மூணே நாளில் மொத்த பணத்தையும் கொடுக்கணும். இல்லனா காரை எடுத்துட்டு போயிடுவானாம். உன்னால எங்க பொழப்பே போச்சு என்கிறார்.

இதையடுத்து, ஸ்ருதியை வைத்து ஸ்டுடியோவுக்கு ரவி சைக்கிள்ளை மிதித்து கொண்டு செல்கிறார். பின்னர் ஸ்ருதி ரவியை வைத்து சைக்கிள் மிதித்துக்கொண்டு செல்ல அதை ஸ்ருதியின் அப்பா, அம்மா பார்த்துவிடுகின்றனர். ஸ்ருதியின் அம்மா முதலில் ஸ்ருதி-ரவியை வீட்டோட கூட்டிக்கிட்டு வரணும்.

இதையும் படிங்க: அருண் விஜய்யை அடி வெளுத்த பாலா!.. வணங்கான் வந்தா பெரிய சர்ச்சை வெடிக்கும்.. பிரபலம் சொன்ன தகவல்!..

அதுக்குனா வேலையை இன்னைக்கே செய்யணும். ஆரம்பிக்கிறேன் என்கிறார். அதன்பிறகு முத்து, சிட்டியை வந்து எனக்கும் உனக்கும் தான் பிரச்சனை. எதா இருந்தாலும் என்கிட்ட பேசு. எதுக்கு என் நண்பர்களை மிரட்டுற? அவங்க காசை ஒழுங்கா கொடுத்துட்டு தான இருக்காங்க.

சிட்டி எனக்கு பணம் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. என்னை அடிச்சதுக்கு நான் எப்படி பழிவாங்குறது? உனக்காக வேணா நாளைக்கு செட்டுக்கு வர என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. வட்டியை கூட தள்ளுபடி பண்ணிடறேன். அசலை மட்டும் எப்போ வேண்டாலும் அவங்க எப்ப முடியுமோ? அப்ப தரட்டும் என்று சொல்ல முத்து முறைத்துவிட்டு கிளம்புகிறார்.

வீட்டுக்கு வந்த முத்துகிட்ட மீனா பேசாமல் இருக்கிறார். முத்து மாடிக்கு படுக்க போகிறார். மீனா ஹாலில் படுத்துக் கொள்கிறார். பின்னர் கீழே வந்த முத்து உண்மைய சொன்னா இன்னும் நீ கஷ்டப்படுவ. உன் தம்பி மேல அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க என்று மனதிற்குள் பேசிக்கொண்டு இருக்கிறார். டக்குனு மீனா எழுந்திருக்க தண்ணீர் குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இனிமே இப்படி பண்ண மாட்டேன் சொன்ன என்ன? நானா எதுக்கு போய் பேசணும் என்று மீனா பேசாமல் படுத்து விடுகிறார்.

இதையும் படிங்க: கதையே தெரியாமத்தான் இத்தனை நாள் சுத்திட்டு இருக்கியா!.. பிரபல ஹீரோவை பங்கமா கலாய்த்த விஜய்!..

மறுநாள் சிட்டி ஷெட்டுக்கு வந்து காரை எடுக்க வருகிறார். அப்போ முத்து வர சிட்டி நீ வருவேனு தெரியும். கோவில்ல வந்து விழுற மாதிரி சாஸ்டங்கமாக கால்ல விழு என்று கூறுகிறார். முத்து பின்னால் நடந்து கால்ல விழுவது போல் பில்டப் கொடுத்து இங்கு இருந்து எட்டி உதைச்சினா நெஞ்செலும்பு முறிஞ்சு போயிடும் என்று மிரட்டிவிடுகிறார்.

நண்பர்கள் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு சிட்டியை துரத்தி விடுகின்றனர். பிறகு, முத்துவிடம் வந்த செல்வம் பணத்துக்கு என்ன செஞ்ச என்று கேட்க காரை வித்துட்டேன் என்கிறார். செல்வம் காரை வித்துட்டு நீ என்னப்பா பண்ணுவ என்கிறார். கார் கூடவா பிறந்துச்சு? இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை செய்து எப்படியும் நான் பிழைச்சிப்பேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் எடுக்கும் கமல்?.. குற்றச்சாட்டுகளை அடுக்கும் பிரபலம்!..

Next Story