Categories: latest newstelevision

ரோகினிக்கு பயத்தை காட்டிய விஜயா… முத்துவுக்கு காரை பரிசாக கொடுத்த மீனா…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினியிடம் உனக்கு நான் காசு கொடுத்ததால தான் அந்த பார்லர் வந்துச்சுனு மறந்துடாத என கத்துகிறார் விஜயா. சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லாம இருந்தேன் ஆண்ட்டி என்கிறார். என்ன சர்ப்ரைஸ் உன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்வீயா என விஜயா தொடர்ந்து சத்தம் போடுகிறார்.

என்ன ஆண்ட்டி ரொம்ப பேசுறீங்க? அதான் எங்க அப்பாக்கிட்டேந்து காசு வாங்கிட்டு வந்து கொடுத்துட்டேன்ல என்கிறார். கொடுத்துட்டா அதுக்கு நான் பட்ட அவமானம் இல்லாம போயிடுமா? இன்னைக்கு வரையும் உங்க அப்பா வந்து பார்க்கலை. மத்த மாமியாருனா சும்மா விட்டுடுவாங்களா?

இதையும் படிங்க: கதையா?.. பிரம்மாண்டமா?.. குழம்பியதால் சினிமாவிலிருந்தே காணாமல் போன தயாரிப்பாளர்!.. அட இவரா?!..

நீ எவ்வளோ பெரிய வீட்டு பெண்ணா வேணாலும் இரு. ஆனா இங்க விஜயா மருமக அதை மறந்துடாத எனத் திட்டுகிறார். பின்னர் வெளியில் செல்லும் ரோகினிக்கு இதுக்கே இப்படி பேசுறாங்க. இன்னும் மத்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகுமோ எனப் பயப்படுகிறார். அடுத்து முத்துவை வந்து அழைத்துக்கொண்டு காரை பார்க்க செல்கிறார் செல்வம்.

பிரண்டுக்கு எனக் கூறி முத்துவை ஓட்டி பார்க்க சொல்ல அவரும் ஓட்டி பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொல்கிறார். இதை அருகில் இருந்து மீனா கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் சந்தோஷப்படுகிறார். அடுத்தநாள், காலை மீனா முத்துவை வலுக்கட்டாயமாக கோயிலுக்கு கூட்டி செல்கிறார். அங்கு காருடன் செல்வம் இருக்க என்ன உன் பிரண்ட் காரை வாங்கிட்டானா என்கிறார்.

இதையும் படிங்க: என்னது!.. சின்னி ஜெயந்த் இவ்வளவு படங்களை இயக்கியுள்ளாரா?!.. அட ஆச்சரியமா இருக்கே!..

ஆமா எனக் கூற அய்யர் வந்து மந்திரம் சொல்கிறார். பின்னர் முத்து புரியாமல் நிற்க மீனா அம்மா வந்து கார் உங்களுக்கு தான் மாப்பிள்ளை எனக் கூற ஆச்சரியத்தில் நிற்கிறார். மாலை கட்டி வந்த காசை எல்லாம் போட்டு அக்கா வாங்கிட்டா எனவும் கூறுகிறார். பின்னர் முத்துவும், மீனாவும் ஏறிச்சென்று காரை எடுக்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

6 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago