மீனாக்கு இப்பையாது ரோஷம் வந்தா சரிதான்… விஜயா உங்க வாயை கொஞ்சம் அடக்குங்க… முடியலை!..

by Akhilan |
மீனாக்கு இப்பையாது ரோஷம் வந்தா  சரிதான்… விஜயா உங்க வாயை கொஞ்சம் அடக்குங்க… முடியலை!..
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா ரூமுக்குள் தூங்க வர விஜயா அவரை நோகடிப்பது போல பேசுகிறார். அதை கண்டுக்கொள்ளாமல் கீழே படுக்க செல்கிறார். ரோகிணி அங்கு வர அவரிடமும் மீனாவை பற்றி தரக்குறைவாக பேசுகிறார். மூவரும் ரூமில் படுத்துவிடுகின்றனர்.

இன்னொரு ரூமில் அண்ணாமலையுடன் மனோஜ் படுக்க முத்து கீழே பாயை விரித்து படுக்கிறார். நீயும் மேலே படு என முத்துவிடம் கூற மனோஜ் இடம் சரியாக இருக்காது என்கிறார். முத்து பரவாயில்லை நீங்க மேலே படுங்கப்பா என்கிறார். கதை சொல்கிறேன் எனப் பேசிக்கொண்டே இருக்க அண்ணாமலை தூங்குகிறார். இதனால் மனோஜ் தூங்க முடியாமல் புரண்டு படுக்கிறார்.

இதையும் படிங்க: பிரம்மாண்டத்தில் மயங்கி போன அஜித்! பழசுதானாலும் இவர விட்டா யாருமில்ல.. அட போங்கப்பா

அந்த ரூமில் ரோகிணி அருகில் குறட்டை விடும் விஜயாவால் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அவரை அடக்க பார்க்க தொடர்ந்து விஜயா குறட்டை விட்டுக்கொண்டே இருப்பதால் கடுப்பாகி வெளியில் சென்றுவிடுகிறார். மனோஜும் ரூமை விட்டு வெளியில் வர அங்கு டைனிங் டேபிளில் ரோகிணி உட்கார்ந்து இருப்பதை பார்க்கிறார். என்னாச்சு எனக் கேட்க விஜயா குறட்டை விடுவதை கூறுகிறார்.

வெளியே இல்லாமல் வெளியில் தான் தூங்கணும் என இருவரும் ஹாலில் பாய் விரித்து தூங்குகின்றனர். காலையில் மீனா லேட்டாக எழுந்து வர விஜயா இன்னும் தூங்க வேண்டியது தானே. மனசு வந்து எழுந்துவந்துட்ட என்கிறார். காய்ச்சல் அடிக்கிது அதான் என மீனா கூற தொடர்ந்து அவரை திட்டிக்கொண்டு இருக்கிறார் விஜயா. ரோகிணி மற்றும் மனோஜ் வர சாப்பிடலாமா எனக் கேட்க இன்னும் இந்த மீனா சமைக்கலை என்கிறார்.

இதையும் படிங்க: சத்யராஜ் போட்ட கண்டிஷன்… அதிகாலையில் துப்பாக்கியுடன் நின்ற தயாரிப்பாளர்…

தூங்கவும் முடியலை. சாப்பிடவும் இல்லனா எப்படி என ஓவராக பேசுகிறார். அப்போ வரும் முத்து எழுந்துட்டியா மீனா. ஏன் அவ தான் சமைக்கணுமா? நீங்களாம் சமைச்சிக்க வேண்டியது தானே என்கிறார். அப்போ ஸ்ருதி மற்றும் ரவி வர என்ன பிரச்னை? சாப்பிடலாமா எனக் கேட்க இன்னும் சமைக்கலை என்கிறார். மீனா உங்களுக்கு என்ன ஆச்சு? ஃபீவர் இருந்தா ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே என்கிறார்.

அண்ணாமலை நீங்க ரெண்டு பேருல யாரும் ஒருத்தர் சமைக்க வேண்டியது தானே எனக் கேட்கிறார். ஸ்ருதி எனக்கு சமைக்க தெரியலை. அதான் செஃப்பா இருக்கும் ரவியை கல்யாணம் செஞ்சிட்டு இருக்கேன் என்கிறார். நாங்க ரவி ஹோட்டலில் சாப்பிட்டு கொள்கிறோம் எனக் கூறி செல்கின்றனர். ரோகிணியை சமைக்க கூற அவரும் எனக்கு கிளையண்ட் மீட்டிங் இருப்பதாக கூறி சென்று விடுகின்றனர். அவங்க நாலு பேரும் வெறும் வயித்தோட சாப்பிடாம போயிருக்காங்க. அவங்க ஹோட்டலில் சாப்பிட்டுப்பாங்க.

நம்ம எப்படி சாப்பிடுறது எனக் கூற முத்து இனிமே யாருக்கும் மீனா சமைக்க மாட்டா? உனக்கு மட்டும் தான் சமைப்பா என்கிறார். கிச்சனில் சென்று வேலை செய்துக்கொண்டு இருக்கும் மீனாவை நிறுத்தும் முத்து. காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்கு. வா ஹாஸ்பிட்டல் போகலாம் என அழைத்து செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story