சிறகடிக்க ஆசை: அண்ணாமலைக்கு ஏற்பட்ட அவமானம்…! அடித்து துரத்திய முத்து..! முடிவான ஸ்ருதி திருமணம்!

by Akhilan |
சிறகடிக்க ஆசை: அண்ணாமலைக்கு ஏற்பட்ட அவமானம்…! அடித்து துரத்திய முத்து..! முடிவான ஸ்ருதி திருமணம்!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா தோழி குடும்பம் வந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது பெருமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பொய்யாய் அடித்து விடுகிறார். மனோஜ் கார் பிசினஸ் செய்கிறான். முத்து நிறைய காரை வைத்து ட்ராவல்ஸ் நடத்துவதாகவும் அடித்து விடுகிறார்.

அண்ணாமலை சின்ன வயசுல கமல் மாதிரி இருப்பாரு. சிக்ஸ் பேக்ஸ்லாம் வச்சிருப்பாரு என அடித்துவிட முத்து இதெல்லாம் நீ எப்போப்பா வச்சிருந்த. நான் போட்டோவை கூட பார்க்கலையே என நக்கலடிக்கிறார். அண்ணாமலையும் நானே பார்த்தது இல்லடா என பாவமாக கூறுகிறார்.

இதையும் படிங்க:ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

விஜயாவின் இந்த பொய்களால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகின்றனர். தொடர்ச்சியாக மீனாவை கோயில் வெளியே பெரிய பூ பிசினஸ் செய்வதாக கூறுகிறார். இதில் கடுப்பான முத்து அதெல்லாம் இல்லை. மீனா பூக்கட்டி வியாபாரம் செய்கிறாள் என விஷயத்தினை உடைத்து விடுகிறார்.

இதனால் விஜயா உண்மையை கூற வேண்டிய கட்டாயத்தில் ஒரு ஆளு இவர் ஓட்டுன ட்ரெயின் மேல வந்து விழுந்துட்டாரு. அதில் மனமுடைந்தவர் அந்த குடும்பத்துக்கு எதுவும் செய்ய சென்றார். ஆனால் அவர்கள் உருட்டி மிரட்டி இந்த பெண்ணை கட்டி வைத்து விட்டனர். இதில் விஜயா தோழி குடும்பத்துடன் வந்த ஒருவர், என்ன சார் இப்படி பொஅழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க. மிரட்டுறதுக்கெல்லாம் பயந்தா இப்படி பண்ணீங்க எனக் கேட்கிறார். இதனால் முத்துவுக்கு கடுப்பாகி விடுகிறது.

வந்தவரின் சட்டையை பிடித்து சண்டை போட்டு விடுகிறார். இதனால் விஜயாவின் தோழி குடும்பம் இந்த சம்மந்தம் வேண்டாம் எனக் கிளம்பி சென்று விடுகின்றனர். நாலு பிளேட் பஜ்ஜிக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து 750 ரூபாய் வாங்கி விடுகிறார். பிறகு ரவியிடம் நீ எந்த பொண்ணை வேணா கட்டிக்கோ ஆனா அப்பாவுக்கு மரியாதை தர குடும்பமா தான் இருக்கணும் என கோபமாக சொல்லி விட்டு வெளியேறுகிறார்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: அம்ருதாவை நெருங்கிய கணேஷ்…! மருத்துவமனை வந்த ராதிகா… அதிர்ச்சியில் மாலினி..!

இந்த பிரச்னையில் கடுப்பான விஜயா மீனாவை பிடித்து நீ தான் இதுக்கெல்லாம் காரணம். அவனை பேச வச்சதே நீதான் எனக் கோபப்படுகிறார். மறுபக்கம் ஸ்ருதிக்கு பிஜூக்கும் சம்பந்தம் பேசி முடிவு செய்து விடுகின்றனர்‌. ஸ்ருதி நாங்க சொன்னா போதும் எனக் கூறிவிட வரும் 15ம் தேதி கல்யாணத்த வச்சுக்கலாம் என தட்டு மாற்றிக் கொள்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story