Connect with us
sivaji

Cinema History

இனிமே உனக்கு இது வேண்டாம்!. சிவாஜி சொன்ன அட்வைஸ்!.. தப்பித்த கண்ணதாசன்!..

எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலருக்கும் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். குறிப்பாக பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை இருவருக்கும் எழுதியிருக்கிறார். இவர்கள் தவிர ஜெமினி கணேசன், முத்துராமன் , ஜெய் சங்கர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் மனதை மயக்கும் பாடல்களை எழுதி இருக்கிறார் கண்ணதாசன்.

சினிமாவில் இவர் கதாசிரியராகவே அறிமுகமானார். சில படங்களுக்கு வசனமும் எழுதினார். எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் படம் எடுத்தபோது அந்த படத்தின் வசனத்தில் பெரும் அங்கு ஆற்றியவர் கண்ணதாசன். சில சரித்திர கதைகளை எழுதி இருக்கிறார். அவை திரைப்படங்களாகவும் வந்திருக்கிறது.

இதையும் படிங்க: சிவாஜி கூட நடிக்க மாட்டேன்!. தெறித்து ஓடிய கார்த்திக்!.. அவர் சொன்ன காரணம் இதுதான்!..

அதன்பின் பாடல்களை எழுத துவங்கினார். கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பல அவதாரங்களை அவர் எடுத்தாலும் பாடலாசியராகவே அவர் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். அதற்கு காரணம் பாடல் வரிகளில் இருந்த அர்த்தமும், ஆழமும்தான். சிவாஜி படங்களில் இவர் எழுதிய பல தத்துவ பாடல்கள் இப்போதும் பலருக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது.

குறிப்பாக ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’, ‘ஆறு மனமே ஆறு’ போன்ற பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதாவை. கண்ணதாசன் எப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தாரோ அப்போது அவருக்கு பிரச்சனை துவங்கியது. கடனாளியாகவும் மாறினார். அதனால், சில சொத்துக்களை விற்றார். மன உளைச்சலுக்கும் உள்ளானார்.

இதையும் படிங்க: நான் பார்த்ததே இல்லடா!. ஒரு ரூபாய் காயினை பார்த்து அழுத சிவாஜி!.. நடிகர் சொன்ன தகவல்!..

கண்ணதாசன் கதை, வசனம் எழுதி தயாரித்து உருவான படம்தான் சிவகங்கை சீமையிலே. இந்த படம் சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியான அன்றே வெளியானது. சிவாஜி படம் வரவேற்பை பெற சிவகங்கை சீமையிலே படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

இதைத்தொடர்ந்து கண்ணதாசனின் உதவியாளரிடம் ‘இனிமேல் கண்ணதாசனை பாடல் எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்த சொல்லுங்கள். கதை, வசனம், தயாரிப்பு இது எல்லாம் வேண்டாம்’ என சொல்லி இருக்கிறார் சிவாஜி. சிவாஜியின் அறிவுரையை கண்ணதாசனும் கேட்டுக்கொண்டார். அதன்பின் அவர் கதை வசனம் எழுதவில்லை. ஆனால், அடுத்து சந்திரபாபுவை வைத்து கவலை இல்லாத மனிதன் என்கிற படத்தை தயாரித்து கடனாளியாக மாறினார் என்பதுதான் உண்மை.

google news
Continue Reading

More in Cinema History

To Top