Connect with us
sivaji

Cinema History

அந்த வேடத்தில் எப்படி நடிப்பது?!.. பயத்தில் சிவாஜிக்கு வந்த காய்ச்சல்!.. 100 படம் நடித்தும் இப்படியா!..

Sivaji ganesan: சிவாஜி எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். நாடகங்களில் பல வருடங்கள் நடித்த அனுபவம் அவரை பல வேடங்களிலும் சிறப்பாக நடிக்க உதவியது. நாடக அனுபவம் ஒரு பக்கம் என்றாலும் நடிப்பு என்பது சிவாஜிக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. எந்த கதாபாத்திரம் என்றாலும் அவரால் அதற்குள் ஊடுறுவ முடிந்தது.

அதனால்தான் ரசிகர்கள் அவரை நடிகர் திலகம் என அழைத்தனர். சினிமாவில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர் சிவாஜி மட்டுமே என தைரியமாக சொல்லலாம். அந்த அளவுக்கு எண்ணற்ற வேடங்களில் கலக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: இவனையெல்லாம் ஏன் உள்ள விட்டீங்க!. சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…

நடிப்புக்கு இலக்கணமாக விளங்கும் சிவாஜி நாடகம் ஒன்றில் ஒரு வேடத்தில் நடிக்க பயந்து காய்ச்சல் வந்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு திரைப்படத்தில் சிவாஜி நடித்துகொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க ஏவிஎம் சரவணன் அங்கு சென்றார்.

சிவாஜி பார்ப்பதற்கு சோர்வாக இருந்தார். அருகில் சென்ற சரவணன் ‘என்ன சார் ரொம்ப டல்லா இருக்கீங்க’ என கேட்க சிவாஜி ‘என் கையை தொட்டுப்பார்’ என சொல்லி இருக்கிறார். அவரின் கையை தொட்டு பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி. ஏனெனில் உடல் அனலாய் கொதித்தது.

இதையும் படிங்க: எம்ஜிஆர், சிவாஜி செய்யாத சாதனையை நான் செஞ்சிருக்கேன்.. கர்வத்துடன் கூறிய சிவக்குமார்

‘என்ன சார். உடம்பு எப்படி கொதிக்குது. டாக்டருக்கு போனீங்களா?’ என சரவணன் கேட்க ‘நாளைக்கு நாடகத்துல ஜஸ்டிஸ் பத்மநாபன் வேடத்துல நடிக்கப்போறேன். அதை சரியா நடிக்கணும். அதை சரியா பண்ண முடியுமான்னு பயமா இருக்கு. இது பயத்துல வந்த காய்ச்ச்சல்’ என சொன்னாராம் சிவாஜி. இதைக்கேட்டு சரவணன் ‘இப்படியும் ஒரு நடிகரா?’ என மிகவும் ஆச்சர்யப்பட்டாராம்.

இத்தனைக்கும் அப்போது சிவாஜி 100 படங்களில் நடித்து முடித்திருந்தார். அவ்வளவு படங்களில் நடித்தும் ஒரு நாடகத்தில் ஒரு வேடத்தில் நடிப்பதற்காக சிவாஜி பயப்பட்டார் என்றால் நடிப்பை அவர் எவ்வளவு மதிக்கிறார் என தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: சிவாஜியை பல மணி நேரம் காக்க வைத்த சரோஜா தேவி!. டிராப் ஆன திரைப்படம்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top