Cinema History
எனது இரண்டு கைகளையும் இழந்துவிட்டேன்.. கதறி அழுத சிவாஜி கணேசன்… என்ன நடந்தது தெரியுமா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 3வது அண்ணன் வி.சி.தங்கவேலு. தந்தை சின்னய்யா மன்றாயர் நாகப்பட்டினம் ரயில்வே பணிமனையில் வேலை பார்த்த போது விழுப்புரத்தில் பிறந்தார்.
இவர் ஆரம்பகாலத்தில் ரயில்வேயில் கேங்மேனாக இருந்தார். முதலில் வேலை பார்த்த இடம் சீர்காழி. அங்கு முதல் மகன் திருஞானசம்பந்த மூர்த்தி பிறந்தார். சீர்காழியில் இருந்து சிதம்பரத்திற்கு பணியிட மாற்றம் வந்தது. 2வது மகனுக்கு கனகசபை நாதர் என்று பெயரிட்டார். விழுப்புரத்தில் பிறந்த 3வது குழந்தைக்கு தங்கவேலு என்று பெயரிட்டார்.
4வது குழந்தையாக பிறந்தவர் தான் நடிகர் திலகம். இவருக்கு கணேசமூர்த்தி என்று பெயரிட்டார். இதற்கு என்ன காரணம்னு தெரியுமா? சின்னய்யா தனக்கு அடுத்ததாக திருச்சிக்கு பணிமாற்றம் வந்தால் அங்கு மையக்கடவுளான கணேசரின் பெயரை தனது அடுத்த குழந்தைக்கு வைப்பதாக வேண்டி இருந்தார்.
4 பிள்ளைகளுடன் நிர்கதியாக இருந்த ராஜாமணி அம்மாள் விழுப்புரத்தில் இருந்து திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரத்திற்கு குடிபெயர்ந்தார். அப்போது பரவிய விஷக்காய்ச்சலில் முதல் இரு மகன்களும் இறந்து போனார்கள். அப்போது தங்கவேலையும், கணேசனையும் காப்பாற்றுமாறு பெற்றோர் சமயபுரம் மாரியம்மனை வேண்டினர். வயலூர் முருகன், திருப்பதி ஏழுமலையான் வரை வேண்டினர். இருவரும் இறைவனின் கருணையால் பிழைத்தனர். 5வது குழந்தைக்கு சண்முகம் என்றும், 6வது குழந்தைக்கு பத்மாவதி என்றும் பெயரிட்டார்.
தங்கவேலு திருச்சியில் ஒரு பஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தார். கணேசனும் அவருடன் மெக்கானிக்காக வேலை பார்த்தார். திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் வரை பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். மீண்டும் நாடகக்குழு வரவே அவருடன் சென்று விட்டார் கணேசன். அப்போது தங்கவேலு தான் பெற்றோரைக் கவனித்தார்.
அந்த சமயத்தில் சிவாஜி திரையுலகில் நிலைத்துவிட்டார். அப்போது ராஜாமணி அம்மாளின் பூர்வீக சொத்துகளை தங்கவேலு கவனித்து வந்தார். தன்னால் படிக்க முடியாமல் போனதால் தம்பி சண்முகத்தை நன்கு படிக்க வைத்தார். லண்டனுக்கு அனுப்பி திரைப்படம் சார்பாக படிக்க அனுப்பி வைத்தார் சிவாஜி. படிப்பு முடிந்ததும் அண்ணன் சிவாஜியின் கால்ஷீட், சம்பளம் ஆகியவற்றைக் கவனித்து வந்தார் சண்முகம். அரசியலிலும் அவருக்கு அந்த சுதந்திரத்தை சிவாஜி கொடுக்கவில்லை. அது தனது சுயவிருப்பம் என்றார். அதனால் தானோ என்னவோ அரசியலில் சிவாஜி பிரகாசிக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
சிவாஜி தான் குடும்பத்திலேயே கோபக்காரர். தனது மகன் பிரபு உயர் காவல் அதிகாரியாக வர வேண்டும் என்பதே அவரது விருப்பம். நம் குடும்பத்தினர் யாரிடமும் கைட்டி நிற்கக்கூடாது என்று சண்முகம் சொல்ல உனது விருப்பம் என்றாராம் சிவாஜி.
பிரபுவை நடிக்க வைப்பதே எனது வேலை என கூறிக்கொண்டு சண்முகம் சங்கிலி படத்தில் நடிக்க வைத்தார். நவராத்திரி படத்தில் அண்ணன் தங்கவேலு காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்தார். 1986ல் தம்பி சண்முகம் திடீரென இறந்து போனார். தொடர்ந்து 1989ல் நெஞ்சுவலியால் அண்ணன் தங்கவேலுவும் இறந்து போனார். 2 சகோதரர்களின் இழப்பு பற்றி கூறும் சிவாஜி, எனது 2 கைகளையும் இழந்தேன் என மனக்குமுறல்களுடன் கூறினாராம்.