Connect with us
sivaji prabu

Cinema History

பிரபுவுக்கே கொடுக்காததை அந்த நடிகருக்கு கொடுத்த நடிகர் திலகம்!.. ஆச்சர்ய தகவல்!..

சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதே போல வில்லனாக நடிப்பவர்கள் நிஜத்தில் நல்ல குணங்களுடன் இருப்பார்கள். இதில் எம்ஜிஆரைப் பொருத்தவரை திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் மக்கள் மேல் தணியாத பாசம் கொண்டு இருந்தார். அதே போல நம்பியார் படத்தில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் தீவிர ஐயப்ப பக்தராக இருந்தார். அதே போல நடிகர் திலகம் சிவாஜியிடமும் பல வியக்கத்தக்க குணங்கள் இருந்தன. அதைப் பற்றி நடிகர் மோகன்லால் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

ஒருமுறை நடிகர் மோகன்லால் சிவாஜி வீட்டிற்குச் சென்றாராம். ஒவ்வொரு அறைக்குச் செல்லும்போதும் அவரது கையைப் பிடித்தபடி அழைத்துச் சென்றாராம். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம் என்கிறார்.

Sivaji, Mohanlal

Sivaji, Mohanlal

சிவாஜி ஸ்டூடியோவுக்குள் வரும்போது எல்லோருமே எழுந்து நின்று அவரை கைகூப்பி வணங்குவார்களாம். அவரைப் போலவே நானும் பிறரிடம் பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்றார் மோகன்லால்.

மலையாளத்தில் சிவாஜி நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினாராம். இயக்குனருக்கும், பிற நடிகர்களுக்கும் நல்ல மரியாதையைக் கொடுத்தாராம். அதே போல அவர் எவரிடமும் குறையோ, குற்றங்களோ சொன்னதே இல்லையாம். படப்பிடிப்பு தடைபட்ட போதும் கூட கோபப்படவில்லையாம். படப்பிடிப்பு முடிந்ததும் மகிழ்ச்சியோடு விடைபெறுவாராம்.

ஒரு படப்பிடிப்புக்காக கேரளாவிற்குச் சென்றபோது மோகன்லாலுடன் தான் தங்கினாராம். அவருக்கு வாத்து இறைச்சி என்றால் கொள்ளை பிரியமாம். அதே போல மற்ற அசைவ வகை உணவுகளையும் விரும்பிக் கேட்பாராம். கேட்டதை எல்லாம் மேசையில் கொண்டு போய் வைத்ததும் அவரது முகம் ஒரு குழந்தையைப் போல சந்தோஷத்தில் துள்ளுமாம்.

இதையும் படிங்க: இளையராஜா கொடுத்த வாய்ப்பு.. சிவாஜி போட்ட கண்டிஷன்!.. மலேசியா வாசுதேவன் நடிக்க வந்தது ஏன்?

ஒவ்வொரு ஐட்டம் பற்றியும், அதன் ருசியைப் பற்றியும் சிலாகித்துப் பேசுவாராம். அவர் அடிக்கும் கமெண்ட்கள் எல்லாம் செமையாக இருக்குமாம். அதே போல அவர் சாப்பிடும் உணவுகள் அவரோட பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பாராம்.

அவர் வாங்கிய விருதுகளைப் பார்க்கும்போது ஒரு அருங்காட்சியைச் சுற்றிப் பார்த்தது போல இருந்ததாம். அவர் விரும்பிய பொருள்களாக இருந்தால் அதை யாரிடமும் கொடுக்க மாட்டாராம். அது மகனாக இருந்தாலும் சரி. அப்படித் தான் நடந்து கொள்வாராம்.

சிவாஜி கையில் ஒரு வாட்ச் இருந்ததாம். அதை நீண்ட நேரமாக மோகன்லால் கவனித்துக் கொண்டே இருந்தாராம். உடனே அதைக் கழற்றி அவரது கையில் மாட்டி விட்டாராம். நீண்டநாள் கழித்து இதைப் பற்றி மோகன்லால் பிரபுவிடம் கூறினாராம். இது அப்பாவுக்குப் பிடித்த வாட்ச். அவருக்குப் பிடித்ததை யாருக்கும் கொடுக்க மாட்டார். உங்களுக்குக் கொடுத்து இருக்கிறார் என்றால் உங்களை அவருக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்று தான் அர்த்தம்’ என்றாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top