நீ நடிக்கவே வேணாம்.. சும்மா நில்லு!.. சிவாஜியையே அடக்கி வைத்த இயக்குனர்....
Actor Sivaji: திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி. இவரும் எம்.ஜி.ஆரை போலவே சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
சிவாஜி ஏற்காத வேடங்களே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் வாழ்ந்து காட்டினார். ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, கடவுள் அவதாரங்கள், சரித்திர புருஷர்கள், இதிகாசத்தில் வந்த கதாபாத்திரங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், ஒரே படத்தில் தந்தை,மகன் என பல வேடங்களில் நடித்திருக்கிறார். அதனால்தான் ரசிகர்கள் அவரை நடிகர் திலகம் என அழைத்தனர்.
இதையும் படிங்க: கடனில் மூழ்கிய சிவாஜி… மகனாக நின்று ரஜினி செய்த காரியம்… என்ன மனுஷன்ப்பா…
ஆனால், சிவாஜியையே நடிக்க வேண்டாம். சும்மா நின்னால் போதும் என்று சொன்ன இயக்குனர் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களை இயக்கியவர் எல்.வி.பிரசாத். கல்யாணம் பண்ணி பார், ராணி, பூங்கோதை, மனோகரா, மிசியம்மா, மங்கையத் திலகம், பாக்கியவதி, இருவர் உள்ளம் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இருவர் உள்ளம் படத்தை பிரசாத் இயக்கியபோது சிவாஜியும், சரோஜாதேவியும் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை எடுக்க வேண்டியிருந்தது. அப்போது சிவாஜியை அழைத்த பிரசாத் ‘கணேசன்.. இந்த காட்சியில் சரோஜாதேவியின் நடிப்பு மட்டுமே ரசிகர்களுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் அது திரைக்கதைக்கு வலு சேர்க்கும் எனவே, இந்த காட்சியில் நீங்கள் உங்கள் நடிப்பை காட்ட வேண்டாம். சும்மா நின்றால் போதும்’ என சொன்னார்.
சிவாஜியுடம் அப்படியே நின்றார். இதுபற்றி ஒருமுறை பேசிய சிவாஜி ‘எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர்களில் முக்கியமானவர் எல்.வி.பிரசாத். அடிப்படை நடிப்பை அவர்தான் எனக்கு சொல்லி கொடுத்தார். ஒரு காட்சி சிறப்பாக வர நடிக்காமலும் இருக்க வேண்டும். ஒரு நடிகன் அதையும் செய்ய வேண்டும். நடிக்காமல் இருப்பதும் ஒரு நடிப்புதான் எனக்கு அவர்தான் சொல்லி கொடுத்தார்’ என சிவாஜி எல்.வி.பிரசாத்தை பாராட்டி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..