Cinema History
சிவாஜி படத்தில் அதகளம் செய்த ரஜினி!.. நடிகர் திலகம் செய்த சிறப்பான சம்பவம்!..
Rajini sivaji: அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். பாலச்சந்தர் இவருக்கு விதவிதமான கதாபாத்திரங்களை கொடுத்து ரசிகர்களிடம் பிரபலப்படுத்தினார். மூன்று முடிச்சி, அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, தப்புத்தாளங்கள் என நடிப்புக்கு தீனி போடும் பல படங்களிலும் நடித்தார் ரஜினி.
ஒருகட்டத்தில் ஆக்ஷன் கதைகளில் நடிக்க துவங்கினார். தனக்கென ஒரு உடல்மொழி, பாணி, ஸ்டைல் ஆகியவற்றை வைத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார். ரஜினியின் ஸ்டைலில் மயங்கிய பலரும் அவருக்கு ரசிகர்களாக மாறினார்கள். எனவே, தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க:சிவாஜி நடித்த பாடலுக்கு குரல் கொடுத்த டி.எம்.எஸ்!.. ஆனாலும் அப்செட் ஆன எம்.எஸ்.வி..
ரஜினி பெரிதும் மதிக்கும் கலைஞர்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருந்தனர். இதில், எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைக்கவில்லை. ஆனால், சிவாஜியிடன் சில படங்களில் நடித்திருக்கிறார். நான் வாழ வைப்பேன், விடுதலை, படிக்காதவன், படையப்பா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
நான் வாழ வைப்பேன் படத்தில் சிவாஜிதான் ஹீரோ. இந்த படத்தில் இடைவேளைக்கு பின்னரே ரஜினி வருவார். படத்தின் கடைசி 20 நிமிடம் ரஜினியை சுற்றியே கதை நகரும். அதோடு, தனது ஸ்டைலாலும், நடிப்பாலும் பிரமாதப்படுத்தியிருப்பார். இந்த படத்தை பார்த்த சிவாஜி ‘ரஜினியை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெறும்’ என நினைத்துகொண்டு தனது காரில் ஏறி புறப்பட சென்றார்.
இதையும் படிங்க: கடனில் மூழ்கிய சிவாஜி… மகனாக நின்று ரஜினி செய்த காரியம்… என்ன மனுஷன்ப்பா…
ரஜினிக்கு அதிக காட்சிகள் இருப்பதால் சிவாஜி கோபித்துக்கொள்வார் என நினைத்த இயக்குனரும், தயாரிப்பாளரும் ஓடி வந்து அவரிடம் ‘கிளைமேக்ஸ் நேரத்தை குறைச்சிடலாம். கொஞ்சம் கட் பண்ணிக்கலாம்’ என சொல்ல சிவாஜியோ ‘ஏன் கட் பண்ணனும்?.. கொஞ்சம் கூட கட் பண்ணக்கூடாது.. ரஜினி நல்லாத்தான் பண்ணி இருக்கான். அவனும் வளர்ந்து வரும் கலைஞன்தான்’ என சொல்லிவிட்டு போனாராம். சிவாஜியின் பெருந்தன்மையை பார்த்து இயக்குனரும், தயாரிப்பாளரும் வியந்து போனார்கள்.
படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், இந்த படத்தில் ரஜினி ஏற்ற மைக்கேல் என்கிற வேடம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படம் 1979ம் வருடம் வெளியானது.
இதையும் படிங்க: இத்தனை திரைப்படங்களா?.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே?..சிவாஜி ரஜினி இணைந்து நடித்த படங்கள்!..