Connect with us
sivaji

Cinema History

அம்மாவை ஏமாத்த அந்தப் பட கெட்டப்பில் போன சிவாஜி! தாய்க்கு தெரியாதா தன் மகனை? எப்படி கண்டுபிடிச்சார் தெரியுமா

Actor Sivaji Ganesan: சினிமாவில்  நடிப்பிற்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. அந்த வகையில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரமாக அமைந்தது  ‘திருவருட்செல்வர்’ படத்தில் சிவனடியாராக வந்த அப்பர் கதாபாத்திரம். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது  அனைவரும் வந்து சிவாஜியை பாராட்டினார்களாம்.

வயதான தோற்றத்தில் கூன் விழுந்து யாரும் கண்டுபிடிக்காத வகையில் அவரின் மேக்கப் இருந்தது. அன்று படப்பிடிப்பு முடிந்ததும் அதே கெட்டப்புடன் தனது அன்னை இல்லம் நோக்கி காரில் சென்றாராம் சிவாஜி.

இதையும் படிங்க: அப்டேட் உங்க இஷ்டத்துக்கெல்லாம் தர முடியாது… வரப்ப கண்டிப்பா வரும்.. சேரன் கொடுத்த ஷாக்!

கார் போக் ரோட்டில் நுழையும் போது தனது டிரைவரிடம்  வீடு வரைக்கும் ஹாரன் அடிக்காமல் சென்று காரை நிறுத்து என உத்தரவிட்டிருக்கிறார்.டிரைவரும் சிவாஜி சொன்னதை போல் செய்திருக்கிறார்.

சிவாஜியின் கார் வருவதை கண்டு வீட்டுக் காவலாளி வேகமாக வந்து வாயிற் கேட்டை திறந்தாராம். ஆனால் கார் உள்ளே வரவில்லையாம். உடனே அந்த காவலாளி ஓடிப் போய் கார் அருகே போய் பார்க்க சிவாஜி மெதுவாக கிழே இறங்கி உஷ் என்ற சத்ததுடன் காவலாளியை அமைதிப்படுத்தி விட்டு இல்லம் நோக்கி சென்றாராம்.

இதையும் படிங்க: ‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்து திடீர் மரணம்… இன்னும் எத்தன பேர காவு வாங்குமோ!…

வீட்டின் வெளியே நின்று கொண்டு  ‘அம்மா தாயே’ என அழைத்தாராம். இவரது சத்தம் கேட்டு உள்ளே இருந்த அவரது தாய் ராஜாமணி அம்மாள் வந்தாராம். அவரை பார்த்ததும் சிவாஜி ‘தாயே நான் ஒரு சிவபக்தன். கைலாயமலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். வழியில் கிடத்ததை சாப்பிடுவேன். ஒரு வாய் சோறு கிடைக்குமா?’ என கேட்டாராம்.

உடனே ராஜாமணி அம்மாள் வந்தது தனது மகன் என்று தெரியாமல் பக்தி பரவசத்தில் உள்ளே அழைத்துக் கொண்டு போய் உணவு பரிமாறினாராம். அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்த ராஜாமணி அம்மாள் இது நம் மகன் சிவாஜி போல சாப்பிடுகிறாரே என சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டிருக்க உடனே சிவாஜி குபீர் என்று சிரித்து விட்டாராம்.

இதையும் படிங்க: ஈஷா சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்.. 10ம் தேதி வேலூரில் துவக்கம்…

அந்தளவுக்கு தன் நடிப்பாலும் திறமையாலும் தன் பெற்ற தாயையே ஏமாற்றியிருக்கிறார் சிவாஜி.

google news
Continue Reading

More in Cinema History

To Top