ஒரே பாடலில் அசந்து போன சிவாஜி கணேசன்.. இந்த பாடகர் தான் எனக்கு வேணும்.. அடம் பிடித்த சூப்பர் சம்பவம்..!

by Akhilan |
ஒரே பாடலில் அசந்து போன சிவாஜி கணேசன்.. இந்த பாடகர் தான் எனக்கு வேணும்.. அடம் பிடித்த சூப்பர் சம்பவம்..!
X

Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்ச நடிகராக இருந்தவர் சிவாஜி கணேசன். அவருக்காக எத்தனையோ பேர் படம் இயக்கவும், பாடவும் தயாராக இருப்பார்கள். ஆனால் அவரே ஒரு பாடகரை வேண்டும் எனக் கேட்டு அடம் பிடித்த சுவாரஸ்ய சம்பவமும் நடந்து இருக்கிறது.

பிரபுவும், சிவாஜியும் ஒருநாள் பேசிக்கொண்டு இருந்து இருக்கிறார்கள். அப்போது அடிமைப்பெண் படத்தில் இருந்து ஆயிரம் நிலவே வா எனத் தொடங்கும் பாடல் ஒலித்திருக்கிறது. இதை கேட்ட சிவாஜி ஆச்சரியமாகி விட்டார்.

இதையும் வாசிங்க:ஷாட் ரெடின்னதும் மனுஷன் இத கூடவா மறப்பாரு?.. ஐய்யய்யோ நம்பியாரோட மானம் போயிடுச்சே!.

இதை அருகில் இருந்த பிரபு தந்தையை ஆவலாகவே பார்த்து கொண்டு இருந்து இருக்கிறார். பாடல் முடிந்து விட சிவாஜி, பிரபு, இன்னொரு தடவை அந்த பாட்டை போடு எனக் கேட்டார். மீண்டும் பிரபு பாடலை போட்டு இருக்கிறார். சிவாஜி பாடலை ரசித்து கேட்டாராம்.

பாடல் முடிய பிரபு என்றவுடன் மீண்டும் அந்த பாடல் ப்ளே ஆனது. இப்படியே கேட்டுக்கொண்டே இருக்க ஒருநாளில் கிட்டத்தட்ட 50 முறை அந்த பாடலை கேட்டு இருக்கிறார். அதை தொடர்ந்தே பிரபுவிடம் இந்த பாடலை பாடியது யார் என்பதையே கேட்டாராம்.

இதையும் வாசிங்க:ரஜினியின் சூப்பர் ஹிட் பட ரீமேக்!. அந்த நடிகர் மட்டுமே நடிக்க முடியும்!.. அட இயக்குனரே சொல்லிட்டாரே!..

அப்போ பிரபு, இது புதுசா எஸ் பி பாலசுப்ரமணியம்னு ஒருத்தர் பாடிய பாடல் என்றாராம். ஆச்சரியமாக கேட்ட சிவாஜி, தன் மகனிடம் பிரபு, என்னோட அடுத்த படத்துல இந்த பையனை பாட வைக்கணும். விஸ்வநாதனிடம் இது விஷயமா உடனே பேசணும் எனச் சொன்னாராம்.

அதை தொடர்ந்தே சிவாஜியின் சுமதி என் சுந்தரி திரைப்படத்தில் பொட்டு வைத்த முகமோ பாடலை பாடினாராம் எஸ்.பி.பி. இந்த செய்தியை தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் சிரித்துக்கொண்டே சொல்லி இருக்கிறார் பிரபு. இப்பாடலை தொடர்ந்து சிவாஜியின் நிறைய படங்களில் பாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story