Connect with us
sivaji

Cinema History

தன்னை வளர்த்துவிட்ட வாத்தியார்!.. வருடம் தவறாமல் சிவாஜி செய்யும் அந்த காரியம்….

சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே தன்னை வளர்த்துவிட்டவர்களிடம் கடைசிவரை நன்றி உணர்ச்சியோடு இருப்பார்கள். அப்படி இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். வாய்ப்பே இல்லாத ஒரு நடிகர் ஒரு இயக்குனர் தனது படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து அவருக்கு ஒரு ஹிட் கொடுப்பார்.

ஆனால், அதே நடிகர் வளர்ந்த பின் அந்த இயக்குனர் அவரை தேடிப்போனால் சந்திப்பதை கூட தவிர்த்துவிடுவார். அப்படி பல ஹீரோக்கள் இங்கே இருக்கிறார்கள். அதேபோல்தான் தயாரிப்பாளர்களின் நிலையும். ஜென்டில்மேன் படத்தில் ஷங்கரை இயக்குனராக்கினார் அப்படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

இதையும் படிங்க: உடனே எனக்கொரு யானை வேணும்!.. கொண்டு வாங்க!.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த சிவாஜி!..

அடுத்து அதே தயாரிப்பாளருக்காக காதலன் படத்தை எடுத்தார் ஷங்கர். ஆனால், இருவருக்கும் இடையே முட்டிக்கொண்டது. அதன்பின் குஞ்சுமோன் பக்கமே ஷங்கர் போகவில்லை. ஒருகட்டத்தில் குஞ்சுமோன் ஃபீல்ட் அவுட் ஆனார். அதேபோல்தான் நடிகர் விஜயும். அவரை வைத்து அவரின் அப்பா எஸ்.ஏ.சி. மட்டுமே படங்களை இயக்கி வந்தார். வேறு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் விஜயை நம்பி படமெடுக்க வரவில்லை.

ஆனால், அவரை நம்பி பூவே உனக்காக படம் எடுத்தார் விக்ரம். இந்த படத்தை தயாரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி. இப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜயை நடிக்க வைக்க வேண்டும் என அவரின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார் சவுத்ரி. ஆனால், விஜய் அவரை சந்திப்பதை கூட தவிர்த்து வருகிறார்.

இதையும் படிங்க: சிவாஜியின் ஹிட் படத்தை பார்த்து எம்.ஜி.ஆருக்கு வந்த ஆசை!.. கடைசி வரைக்கும் நடக்காம போச்சே!…

சினிமாவில் நன்றி உணர்ச்சி என்பதெல்லாம் 60களில் மட்டுமே இருந்தது. சிறு வயது முதலே நாடகத்தில் நடித்து வந்த சிவாஜி கணேசனுக்கு ஆசானாக இருந்தவர் பெருமாள் முதலியார். பராசக்தி படத்தில் சிவாஜியை ஹீரோவாக போட்டு படத்தை தயாரித்தவரும் அவர்தான். எனவே, எப்போது அவரை பற்றி பேசினாலும் ‘எனது தெய்வம்’ என்றுதான் சிவாஜி குறிப்பிடுவார்.

அதோடு, ஒவ்வொரு வருடம் பொங்கல் வரும்போதும் பெருமாள் முதலியார் குடும்பத்துக்கு சீர் கொடுத்து வருகிறார் சிவாஜி. பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பு வேலூர் சென்று நேரில் அவரை பார்த்து காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு சீர் கொடுத்து வருவாராம். 60 வயதில் கூட பெருமாள் முதலியாரின் தாயார் காலில் விழுந்து ஆசி வாங்கி வாங்கியிருக்கிறார். தனக்கு பின் இது நிற்கக்கூடாது என தனது மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபுவிடம் கட்டளை இட்டிருக்கிறார் நடிகர் திலகம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top