வாழ்வின் கடைசி கட்டத்திலும் அந்த ஒரு விஷயத்துக்காக ஆசைபட்ட சிவாஜி… ஆனால் சோகம் என்னன்னா?

by Arun Prasad |   ( Updated:2023-05-04 11:34:07  )
Sivaji Ganesan
X

Sivaji Ganesan

சிவாஜி கணேசன் நடிகர் திலகமாக ஜொலித்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். சினிமாவை தனது உயிரிலும் மேலாக மதித்தவர். நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். இவ்வாறு சிவாஜி கணேசனின் பெருமைகளை நாம் கூறிக்கொண்டே போகலாம்.

சிவாஜி கணேசனுக்கு ஒரு கட்டத்தில் வயதான பின் இறுதய கோளாறு ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அந்த கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வந்தார். இதனிடையேதான் கமல்ஹாசன் "தேவர் மகன்" படத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக அவரை அணுகினார். அப்போது அவரது புதல்வர்களான ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர், "தந்தைக்கு உடல் நிலை சரியில்லை, இப்போது எப்படி அவரை நடிப்பதற்கு அனுமதிக்கமுடியும்?" என கூற, அதற்கு கமல்ஹாசன், "அவர் எனக்கும்தான் தந்தை. அவரை நான் பார்த்துக்கொள்கிறேன்" என கூறினாராம். அதன் பிறகுதான் ராஜ்குமாரும் பிரபுவும் ஒப்புக்கொண்டார்களாம்.

"தேவர் மகன்" திரைப்படத்தை தொடர்ந்து "பாரம்பரியம்", "பசும்பொன்", "ஒம்ஸ் மோர்", "என் ஆசை ராசாவே", "மன்னவரு சின்னவரு", "படையப்பா", "பூப்பறிக்க வருகிறோம்" போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு மூச்சு திணறல் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவாஜி கணேசன், அந்த ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி காலமானார்.

அவரது இறுதி மூச்சு வரை சினிமாவில் நடிக்க வேண்டும் என்றுதான் விரும்பினாராம் சிவாஜி கணேசன். ராஜ்குமாரும் பிரபுவும் அவரை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்று அந்த சமயத்தில் வதந்திகள் பரவியது. ஆனால் ராஜ்குமாரும் பிரபுவும் சிவாஜி கணேசன் மிகவும் அக்கறையோடு பார்த்துக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை.

Next Story