அந்த படவா ஒன்னும் சொல்லலையே… சிவாஜியே வீம்புக்கு அழைத்து பல்பு வாங்கிய சம்பவம்! என்ன படம் தெரியுமா?
Sivaji Ganesan: தமிழ் சினிமாவின் நடிப்பு திலகம் என்றால் அது சிவாஜி தான். அவர் எல்லா கலைஞர்களிடமும் பாகுபாடு இல்லாமல் பழகுவார். அப்படிப்பட்டவரின் சூப்பர்ஹிட் படத்தினையே ஒரு பிரபலம் கலாய்த்த சம்பவம் நடந்து இருக்கிறது.
நடிகர் சிவாஜி கணேசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் அவருக்கு வந்த படம் தான் தேவர் மகன். முதலில் இந்த வாய்ப்பை கமல் கொடுத்ததும் மறுத்து விட்டாராம். ஆனால் நீங்கள் தான் வேணும் என்ற பிடிவாதத்தில் கமல் காத்து இருந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நானும் எப்பதான் விஜய் மாறி ஆவுறது? சொந்தமாவே சூனியம் வைக்க தயாரான சிவகார்த்திகேயன் – அடக்கடவுளே
இதை தொடர்ந்து அவர் தன்னுடைய சிகிச்சை முடிந்து வந்த பின்னரே இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்து இருக்கிறார். 1992 ஆண்டிற்கான 40வது இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இத்திரைப்படம் ஏகப்பட்ட பிரிவில் 5 விருதுகளை வென்றது. மேலும், ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மொத்தம் ஏழு நாட்களுக்குள் எழுதி முடித்தாராம். இப்படத்தினை பரதன் இயக்கி இருந்தார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைப்பு செய்தார். கமலின் தந்தையாக பெரிய தேவர் கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்து இருந்தார்.
தனக்கு நெருக்கமான திரையுலக நண்பர்களுக்கு ஒரு ஷோவை போட்டு காண்பித்து இருக்கிறார் சிவாஜி கணேசன். எல்லாரும் படத்தினை ஆஹாஓஹோ என புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர். ஆனால் படத்தினை பார்த்த கவுண்டமணி மட்டும் சத்தமே இல்லாமல் நழுவி இருக்கிறார். இதை சிவாஜி பார்த்துவிட்டார்.
இதையும் படிங்க: பாண்டிராஜை போட்டுக்கொடுத்த நடிகை..! படப்பிடிப்பில் அசிங்கமாக திட்டிய சேரன்…!
இதனால் தன்னுடைய உதவியாளரிடம் அந்த படவா எதுவுமே சொல்லலை. அவரை உடனே வீட்டுக்கு வரச்சொல் என்றாராம். அவரும் அழைத்து தகவலை சொல்ல நான் என்ன சொல்வது என நழுவி இருக்கிறார். இருந்தும் சிவாஜியின் பேச்சை தட்ட முடியாமல் வீட்டுக்கு வந்தாராம்.
படம் எப்படி இருக்கு என சிவாஜி கேட்க, சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க ஊருலையே பெரிய ஆளு. ஒரே உங்கள கண்டா மரியாதை பயந்து நடுங்குறாங்க. ஆனா ஒரு சின்ன பிள்ளை மிதிச்சா செத்து போவீங்க என கவுண்டர் போட்டாராம். இதைக் கேட்ட சிவாஜிக்கு என்ன சொல்வதுனே தெரியாமல் கடைசியாக சிரித்தே விட்டாராம்.