Connect with us
sivaji ganesan

Cinema History

ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்!.. தவித்துப்போன நடிகர் திலகம்!.. கடைசியில் நடந்தது இதுதான்!..

66களில் மிகவும் அதிகமான படங்களில் நடித்து வந்தார் சிவாஜி. ஒரே நேரத்தில் அவரின் 2 படங்களும் வெளியாகும். சில சமயம் இரண்டு படங்களும் நல்ல வசூலை பெறும். சில சமயம் ஒரு படம் மட்டுமே அதிக வசூலை பெற்றுவிடும். இப்படி பல முறை நடந்துள்ளது.

இப்போது நடிகர்களின் கைகளில் சினிமா இருப்பது போல அப்போது இல்லை. இயக்குனர்களும், தயாரிப்பாளர்களுமே முக்கிய முடிவை எடுப்பார்கள். குறிப்பாக படத்தின் கதை, தலைப்பு, யார் கதாநாயகி, யார் ஹீரோ, ரிலீஸ் தேதி என எல்லாவற்றையும் அவர்கள்தான் முடிவு செய்வார்கள். நடிகர்கள் அதில் தலையிடவே முடியாது. நடிகர்களின் வேலை நடிப்பது மட்டும்தான்.

இதையும் படிங்: இரண்டு நடிகர்கள் நடித்து தூக்கப்பட்டு 3வதாக சிவாஜி நடித்த படம்!.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் இதுதான்..

60களில் தமிழ் திரையுலகில் புதிய கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். நாடக பாணி உச்சரிப்பை கொண்டிருந்த சினிமாவில் சாதரணமாக பேசும் வழக்கத்தை கொண்டு வந்தவர் அவர்தான். நெஞ்சில் ஒர் ஆலயம் என சீரியஸ் படமும் எடுப்பார். காதலிக்க நேரமில்லை என காமெடி படமும் எடுப்பார்.

ooty varai uravu

சிவாஜி, கே.ஆர்.விஜயாவை வைத்து எடுத்த படம்தான் ஊட்டி வரை உறவு. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஊட்டியிலேயே எடுத்தார் ஸ்ரீதர். இப்படத்திற்கு அருமையான பாடல்களை போட்டு கொடுத்தார் எம்.எஸ்.வி. மேலும், நாகேஷ், பாலையா, முத்துராமன், எல்.விஜயலட்சுமி, வி.கே.ராமசாமி என பலரும் இப்படத்தில் நடித்தனர். சித்ராலயா கோபுவுடன் இணைந்து இந்த படத்தின் கதையை உருவாக்கியிருந்தார் ஸ்ரீதார்

இதையும் படிங்க: சிவாஜி சொல்லியும் கேட்கல!.. கடைசியில காசு போனதுதான் மிச்சம்!.. ஏவிஎம் சந்தித்த தோல்வி…

ஊட்டி வரை உறவு ஒரு கலர் திரைப்படம். ஆனால், இந்த படத்தில் நடிக்கும்போதே ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கதில் இரு மலர்கள் என்கிற படத்திலும் சிவாஜி நடித்தார். ஆனால், அது கருப்பு வெள்ளையாக உருவானது. 1967ம் வருடம் தீபாவளிக்கு தனது ஊட்டி வரை உறவு படத்தை வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்ரீதர். அதேபோல், இரு மலர்கள் படத்தையும் தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என திருலோசச்சந்தர் நினைத்தார்.

iru malargal

இரு மலர்கள் கருப்பு வெள்ளை படம் என்பதால் அந்த படம் முதலில் வரட்டும். இரண்டு வாரங்கள் கழித்து ஊட்டி வரை உறவு வந்தால் 2 படங்களுக்கும் நல்ல வசூல் கிடைக்கும் என நினைத்த சிவாஜி சித்ராலயா கோபு மூலம் ஸ்ரீதரிடம் பேச சொன்னார். ஆனால், ஸ்ரீதர் அதை கேட்கவில்லை. அதேபோல், தனது தம்பி சண்மும் மூலம் இரு மலர்கள் படத்தை தள்ளி வைக்க முயற்சி செய்தார். திருலோகச்சந்தர் அதை கேட்கவில்லை. கடைசியில் இரண்டு படங்களும் ஒரே நாளில் தீபாவளிக்கு வெளியானது. சிவாஜி பயந்தது போல் இல்லாமல் இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்றது. அதன்பின்னரே சிவாஜி நிம்மதி பெருமூச்சி அடைந்தாராம்.

இதையும் படிங்க: பிரிந்திருந்த சிவாஜி – கண்ணதாசனை சேர்த்து வைக்க இயக்குனர் செஞ்ச வேலை!.. நடந்தது இதுதான்..

google news
Continue Reading

More in Cinema History

To Top