சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்கப்போவது இவர்தானாம்!.. செம காம்போவா இருக்குமே!...

by சிவா |   ( Updated:2024-04-12 07:24:27  )
sivakarthikeyan
X

விஜய் டிவியில் ஆங்கராக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்து பெரிய ஸ்டாராக மாறியவர்தான் சிவகார்த்திகேயன். இவருக்கு பின் விஜய் டிவியிலிருந்து பலரும் ஹீரோவாக நடிக்க வந்தனர். அதில் கவின் மற்றும் லியோ என சிலர் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்தனர். ஆனால், யாராலும் சிவகார்த்திகேயன் தொட்ட உயரத்தை தொடமுடியவில்லை.

துவக்கத்திலிருந்தே நண்பர்களுடன் ஜாலி பண்ணும் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சிவகார்த்திகேயன். அதோடு நகைச்சுவை உணர்வும் அவருக்கு கை கொடுக்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்கள் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.

இதையும் படிங்க: தளபதியா மாற அடுத்த அஸ்திரம்… சிவகார்த்திகேயன் ஐடியாலாம் தனி ரகமா இருக்கே!..

இவருக்கு முன் சினிமாவுக்கு வந்து பல வருடங்களாக பல நடிகர்களும் போராடி கொண்டிருக்கும் நிலையில் குறைவான காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார் சிவகார்த்திகேயன். காதல், காமெடி கலந்த செண்டிமெண்ட் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ரஜினி, விஜய்க்கு பின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் சிவகார்த்திகேயன் மாறிப்போனார்.

தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘அமரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படம் ஒரு ராணுவ வீரரின் வாழ்வில் நடந்த உண்மை கதையாகும். அதேபோல், ஒருபக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அடுத்த பட தயாரிப்பாளரை டிக் அடித்த விஜய்!. அட இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கவே இல்லையே!…

இந்த படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் சிவகார்த்திகேயனின் 24வது திரைப்படமாகும். எனவே, அடுத்து நடிக்கவுள்ள படம் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாகும். நடிகர்களுக்கு 25,50,75,100வது படங்கள் முக்கிய படமாக கவனிக்கப்படும்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 25வது படத்தை கோட் பட இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளாராம். இப்படம் ஒரு அதிரடி ஆக்‌ஷன் கதையாக உருவாகவிருக்கிறதாம். அனேகமாக இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.

Next Story