Categories: latest news

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்புக்கு பின் இப்படி ஒரு சூட்சமம் இருக்கா? பலே கில்லாடிதான்பா

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னனி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று அவருக்கு இருக்கும் மாஸ் விஜய், அஜித் இவர்களை போலவே சினிமாவில் அடுத்த இடத்திற்கு உட்காரவைத்திருக்கிறது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் நடிகராகவே சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார்.

அதுவும் விஜயின் அடுத்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா என்ற பேச்சும் ஒரு பக்கம் அடிபட்டுக் கொண்டு வருகிறது. விஜய் கூடிய சீக்கிரம் சினிமாவிற்கு முழுக்கு போட இருக்கிறார். அதனால் அடுத்த விஜய் யார் என்ற கேள்வி எழ ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலானோர் விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் நிரப்புவார் என்று கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ‘வடசென்னை 2’க்கு வச்சாரே மொத்தமா ஒரு ஆப்பு! உளறிய சீமான்.. வசமாக மாட்டிக் கொண்ட வெற்றிமாறன்

இன்னும் சில பேர் ஒரே ஒரு தளபதிதான். ஒரே ஒரு விஜய்தான். அதனால் அடுத்த தளபதி என்பதெல்லாம் இல்லை என்றும் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும் ஆசை தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதுதான். அந்த வகையில் சிவகார்த்திகேயனும் செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாகவேதான் நேற்று போரூரில் திடீரென தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஒரு பெருங்கூட்டத்தை கூட்டியதற்கு இதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

அதாவது விஜய்க்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் பெயர் தான் அடிபட்டு வருகிறது. இது சிவகார்த்திகேயனுக்கும் தெரியும். அதனால் அதை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே என்றைக்கும் இல்லாத திருநாளாக நேற்று அந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

இதையும் படிங்க: நான் பாடின முதல் தமிழ் பாட்டு அதுதான்!. ஆனா படமே டிராப் ஆயிடுச்சி!.. சோகத்துடன் சொன்ன எஸ்.பி.பி..

மேலும் ரசிகர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன் எனக்கு அப்பா கிடையாது. அண்ணன் கிடையாது. அதனால் என் வலிகளை சொல்ல யாரும் இல்லாமல் இருந்தேன். இப்போது ரசிகர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள் என ஒரு பிட்டை போட்டு தன் மீது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை திருப்ப ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருக்கிறார். இது கண்டிப்பாக விஜயின் இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் கையாளும் டெக்னிக்தான் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

Rohini

Recent Posts

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

37 minutes ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

1 hour ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

10 hours ago