சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன்! சூர்யா மிஸ் பண்ண வாய்ப்பை கையில் எடுக்கும் SK

siva
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் இப்போது ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய், அஜித், சூர்யா இவர்களுக்கு அடுத்தபடியாக இவருடைய மார்க்கெட் தான் அதிக அளவில் வளர்ந்து இருக்கிறது. அதேபோல அவர்களுக்கு இணையான ரசிகர் படை பலத்துடன் ஒரு மாஸ் ஆக்சன் ஹீரோவாக சமீப காலமாக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
மேலும் விஜய் இப்போது அரசியலுக்கு போக இருப்பதால் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் கூட இருக்கலாம் என்ற ஒரு டாப்பிக்கும் போய்க்கொண்டிருக்கின்றது. இப்படி அடுத்தடுத்து பல சுவாரசியமான செய்திகளால் சிவகார்த்திகேயன் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாகவே மக்கள் முன் அறியப்படுகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் அமரன்.
இதையும் படிங்க: சிரிக்க வைத்த குக் வித் கோமாளியா இது? இப்போ வெறுப்பேற்றும் கோமாளிகள்… ஓவர் சீன் போட்டு அன்ஷிதா… முடியல…
அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தான் நிறைவடைந்தது. ராஜ்கமல் தயாரிக்கும் அந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் சுதா கொங்கராவுடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான மீட்டிங் சமீபத்தில் தான் நடைபெற்றதாம்.
சிவகார்த்திகேயன் மட்டுமல்ல விக்ரமும் சுதா கொங்கராவுடன் ஒரு கதை ஆலோசனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் கடைசியில் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சுதா கொங்கரா சூர்யா கூட்டணியில் புறநானூறு திரைப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: எல்.கே.ஜி படத்தில் நடிக்காமல் போனதுக்கு காரணம்? புதுசா யோசிச்சிருக்காரே நம்ம கரகாட்டக்காரன்
ஆனால் ஏதோ சில காரணத்தால் சூர்யா அந்த படத்தில் நடிக்க முடியாது என சொன்னதால் அந்த படம் அப்படியே நின்று போனது. அதற்கு அடுத்தபடியாக சுதாக கொங்கரா தேர்ந்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். இவர்கள் இணையும் இந்த படத்தின் கதை எந்த மாதிரியான ஒரு கதைக்களத்தில் இருக்கும் என்பது இனிமேல் தான் நமக்கு தெரிய வரும்.