ரகசிய திருமணம் செய்ய இருக்கும் சிவகார்த்திகேயன் நாயகி… வேற லெவலில் போட்ட ப்ளான்…

by Akhilan |
ரகசிய திருமணம் செய்ய இருக்கும் சிவகார்த்திகேயன் நாயகி… வேற லெவலில் போட்ட ப்ளான்…
X

Sivakarthikeyan: நடிகைகள் தற்போது கல்யாணம் செய்வதையே அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டனர். இதனால் பெரிய நடிகைகள் திருமணம் தமிழ் திரையுலகில் நடந்தே சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் கல்யாணத்துக்கு தயாராகிவிட்டார்.

தமிழில் தடையற்க தாக்க படம் மூலம் முன்னணி நாயகியாக எண்ட்ரி கொடுத்தவர். தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் வந்தது. தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். அப்படம் ஹிட் கொடுக்காமல் போக அம்மணிக்கு தமிழ் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இதையும் படிங்க: 2000களில் மிரட்டிய வில்லன்களுக்கு டப்பிங் கொடுத்த கௌதம் மேனன்!.. படத்துக்கே அதுதான் மாஸ்!.

சமீபத்தில் பல வருடம் கழித்து சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த அயலான் படம் ரிலீஸானது. தற்போது தமிழில் இந்தியன்2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தன்னுடைய நீண்டகால காதலரை கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பாலிவுட்டில் தயாரிப்பாளராக இருக்கும் ஜாக்கி பக்நாணியுடன் சில வருடமாக ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் இரு வீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இருக்கிறார்களாம். முதலில் வெளிநாட்டில் இந்த திருமணத்தினை செய்ய முடிவெடுக்கப்பட்டதாம்.

ஆனால் பிரதமர் மோடி வெளிநாட்டில் விஷேசங்களை கொண்டாட வேண்டாம். நம் நாட்டிலேயே செய்யுங்கள் என மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அதை கருத்தில் கொண்டு கோவாவில் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்களாம். இருவரும் தங்கள் காதலை அறிந்த இடம் என்பதாலே கோவா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறதாம்.

இந்த திருமணம் பெரிய அளவில் இல்லாமல் ரகசியமாக நெருங்கமான உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறதாம். இதனால் மீடியா ஆட்களுக்கும் அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது. பிப்ரவரி 21 மற்றும் 22 ந் தேதியில் இந்த திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் இன்டஸ்ட்ரி ஹிட் படங்கள் என்னென்ன?.. வசூல் எவ்வளவு தெரியுமா?

Next Story