எனக்கு காசு முக்கியமில்ல!.. மரியாதைதான் முக்கியம்!. பட்டாசாக வெடித்த எஸ்.கே!…

Published on: November 21, 2024
sivakarthikeyan
---Advertisement---

Sivakarthikeyan: இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஆங்கராக வேலைக்கு சேர்ந்தார். சில வருடங்கள் சில நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராக வேலை செய்தார். அதன்பின் சினிமாவில் நுழைந்து இப்போது முன்னணி நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகராக மாறியிருக்கிறார்.

மிகவும் குறுகிய காலகட்டத்தில் மளமளவென மேலே உயர்ந்து ரஜினி, விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். இவரை பார்த்து பல நடிகர்கள் பொறாமைப்பட்டார்கள். இதை அஜித்தே இவரிடம் சொல்லி இருக்கிறார். சிவாவுக்கு அவ்வப்போது தேவையான அறிவுரைகளை சொல்வது அஜித்தின் வழக்கம்.

இதையும் படிங்க: Pushpa2: தமிழ் மொழிதான் எப்பவும் சூப்பர்!.. மனம் விட்டு பாராட்டும் புஷ்பா பட ஹீரோ..

காமெடி கலந்த காதல் கதைகளில் ஜாலியாக நடிப்பதே சிவகார்த்திகேயனின் ஸ்டைல். ஆனால், அமரன் படத்தில் நடிப்பில் வேறொரு பரிமாணத்தை காட்டியிருந்தார். அதற்கு காரணம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த முகுந்த் வரதராஜனின் உண்மை கதை இது.

இந்த படத்தில் சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கடைசி 20 நிமிடங்கள் ரசிகர்களை கண் கலங்க வைத்தது. அமரன் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. சூர்யாவின் கங்குவா படம் 100 கோடியையே தாண்டாத நிலையில் அமரன் மெகா வசூலை அள்ளியுள்ளது.

sivakarthikeyan

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா, வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘விஜய் டிவியில் எனக்கு பெரிய சம்பளமெல்லாம் கிடையாது. ஆனால் மரியாதை இருந்தது.

எனக்கென ஒரு மேடை கொடுத்தார்கள். அதுவே போதும். ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரால் எவ்வளவு பெரிய ஆதாயம் கிடைத்தாலும் எனக்கு மரியாதை கொடுக்கவில்லை எனில் அவரிடம் நான் இருக்க மாட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி ரிலீசுக்கு தேதி குறித்த இயக்குனர்!.. ஜெட் வேகத்தில் படக்குழு!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.