Amaran: போடுறா வெடிய!... 200 கோடி கிளப்பில் இணைந்த அமரன்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!...

by ramya suresh |
Amaran: போடுறா வெடிய!... 200 கோடி கிளப்பில் இணைந்த அமரன்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!...
X

#image_title

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜர் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்கள்.

படம் வெளியானது முதலே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கின்றது. படம் வெளியாகி ஒரு வாரமான நிலையில் வசூலிலும் சக்க போடு போட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

இதையும் படிங்க: STR: 40 years of STR!… ஃபுல்லா கூஸ்பமஸ் தான்!.. வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிரவிட்ட ரசிகர்கள்…!!

ஜிவி பிரகாஷின் இசை இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தது என்றே கூறலாம். இப்படத்தில் ராணுவ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்று விட்டார். இப்படம் வெளியான முதல் நாளில் 42 கோடி உலக அளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.

amaran

தொடர்ந்து படத்தின் வசூல் அதிகரித்து வந்த நிலையில் 9வது நாளான இன்று படம் மொத்தமாக 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கேரளா உள்ளிட்ட மொழிகளிலும் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அமரன் திரைப்படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்த காரணத்தால் தொடர்ந்து வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டது என்பதை நேற்று நடைபெற்ற அமரன் திரைப்படம் சார்பாக மும்பை ரசிகர்களுடன் சந்திப்பின்போது இந்த தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் உற்சாகமாக தெரிவித்து இருந்தார். இந்த செய்தி படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல் தயாரிப்பாளரான கமலஹாசனுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.

இதையும் படிங்க: Jayam Ravi: பிரதர் படத்தின் ரிசல்ட்!.. அடுத்த படத்துக்கும் ஆப்புதானா?!.. புலம்பும் தயாரிப்பாளர்!…

வரும் 14ஆம் தேதி நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த வாரம் மட்டுமின்றி அடுத்த வாரம் கங்குவா படத்துடன் இணைந்து அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story