ரொம்ப பெருமையா இருக்கு!.. திடீரென விஜய் சேதுபதியை வாழ்த்திய எஸ்கே.. எதுக்கு தெரியுமா?..

by ramya suresh |
sivakarthikeyan
X

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியானதற்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பிறகு மிக பிஸியான நடிகராக மாறிவிட்டார். இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படமாக அமரன் திரைப்படம் மாறி இருக்கின்றது. இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றார் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க:கஷ்டப்பட்டு மூனு பக்கம் டைப் பண்ணியிருந்தாங்க!.. அதான் ஆதரவு!.. ட்ரோலில் சிக்கிய பார்வதி!…

அவரின் நடிப்பை தாண்டி இந்த திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த திரைப்படத்தில் தனது முழு முயற்சியையும் மேற்கொண்டு சிறப்பாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகின்றார். அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கும் தயாராகி வருகின்றார்.

maharaja

maharaja

இப்படி சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தற்போது தனது சக நடிகரான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார். நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மகாராஜா.

இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சீனாவிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகாராஜா திரைப்படத்திற்கும், விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் நித்திலனுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.

இதையும் படிங்க: அவரு சூர்யாவுக்கு மட்டுமில்ல!.. தமிழ் சினிமாவுக்கே ரொம்ப ஆபத்து!.. பொங்கி எழுந்த பிஸ்மி..!

'சீனாவில் மிகப்பெரிய அளவில் மகாராஜா திரைப்படம் வெளியாகி உள்ளது. இதை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். அங்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று நம்புகிறேன். உலகம் முழுவதும் இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்புக்காக விஜய் சேதுபதி, நிதிலன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் என அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறி இருக்கின்றார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Next Story