SK 24: உண்மையிலேயே இதான் படத்தோட டைட்டிலா?

by manju |   ( Updated:2024-09-03 01:05:14  )
SK 24: உண்மையிலேயே இதான் படத்தோட டைட்டிலா?
X

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்கிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் அமரன் படம் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் டான் புகழ் சிபி சக்கரவர்த்தியின் அடுத்த படத்தில் சிவகார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது அவரின் 24-வது படமாக இருக்கும். டான் படம் வெளியாகி நாட்கள் கடந்தும் சிபியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகவில்லை.

தொடர்ந்து அவர் தெலுங்கில் கால் பதிப்பதாக தகவல்கள் வெளியாகி பட்ஜெட் காரணத்தினால் அப்படம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் சிவகார்த்திகேயன் மீண்டும் தன்னுடைய படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

இருவரும் இணையும் படத்திற்கு தற்போது Boss என டைட்டில் வைத்து இருக்கின்றனராம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 23-வது படத்தில் நடித்து வருகிறார். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.

தொடர்ந்து அவர் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் அமரன் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Next Story