Ameer – Gnananvel Raja: எப்படியோ ஒரு வழியாக காரசாரமாக நடந்த விவாதம் கொஞ்சம் முடிவுக்கு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பிரச்சினைக்கு முழுவதும் தீர்வு எட்டவில்லை என்றாலும் இப்போதைக்கு அமீரின் பிரச்சினையை ஆஃப் செய்திருக்கிறது ஞானவேல் ராஜாவின் மன்னிப்பு கடிதம்.
இருவரும் மாறி மாறி புகார் அளித்ததை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஞானவேல்ராஜா தகாத வார்த்தைகளால் அமீரை தாக்கி பேசியது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியது. அதுமட்டுமில்லாமல் அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, பொன்வண்ணன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் தங்கள் ஆதரவை கொடுக்க ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை பார்த்ததும் கணித்த பானுமதி.. அவர் சொன்ன ஜோசியமும் அப்படியே பலிச்சிடுச்சே!..
ஆனால் பிரச்சினை கொழுந்து விட்டு எரிய சிவக்குமார் குடும்பம் இதை பற்றி வாயே திறக்கவில்லை என்பதுதான் பல பேரின் கேள்வியாக இருந்தது. பருத்திவீரன் பிரச்சினை தொடர்பாக அனைத்தும் தெரிந்த சிவக்குமார் குடும்பம் ஆரம்பத்திலேயே இதுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் ஏன் இந்த மௌனம் என்றே ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் கரு.பழனியப்பன் கொடுத்த அறிக்கை ஒன்றுதான் சிவக்குமாரின் மௌனத்தை கலைத்திருக்கிறது என கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.கரு.பழனியப்பன் தன்னுடைய அறிக்கையில் பருத்திவீரன் பிரச்சினை ஒரு பக்கம் இருக்கட்டும்.
இதையும் படிங்க: பருத்திவீரன் பட்ஜெட் என்ன?!.. அமீர் செலவு செய்தது எவ்வளவு?.. யார் தயாரிப்பாளர்?..
அதற்கு கூட சிவக்குமார் ஐயா எதுவும் சொல்லவேண்டாம். ஆனால் ஞானவேல் ராஜாவின் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்காகவாவது எதாவது ஒரு கண்டனம் தெரிவிக்கலாமே என்று குறிப்பிட்டிருந்தார், இந்த ஒரு வார்த்தைதான் சிவக்குமாரை உசுப்பேற்றியிருப்பதாக தெரிகிறது.
உடனே ஞானவேல் ராஜாவுக்கு போன் செய்து உடனடியாக அமீரிடம் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவக்குமார் சொன்னதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகத்தான் அவசர அவசரமாக ஞானவேல் ராஜா அமீருக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி இணையத்தில் பதிவிட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: இப்படி காட்டினா பொழப்பு ஓடாது!.. அழகை காட்டி மயக்கும் பூஜா ஹெக்டே!…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…