Parasakthi: தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். விஜய் டிவியில் ஆங்கராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நடிக்க துவங்கி படிப்படியாக உயர்ந்து தற்போது பலரும் பொறாமைப்படும் அளவுக்கு இருக்கிறது அவரின் வளர்ச்சி. தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த 3 திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது தனுஷுக்கு நிகரான சம்பளம் வாங்குமளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
இத்தனைக்கும் தனுஷாவது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என பல மொழிகளிலும் நடித்து இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் தமிழில் மட்டுமே நடித்து இந்த வளர்ச்சியை பெற்றிருக்கிறார். அவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை தொட்டது. தனுஷின் படம் கூட இதுவரை அவ்வளவு வசூலை செய்ததில்லை.

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வருகிற 10தேதி வெளியாகவுள்ளது. 9ம் தேதி ஜனநாயகன் வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாவதாக பலரும் பார்க்கிறார்கள்.
இந்நிலையில்தான் தான் நேற்று சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

பொதுவாக சினிமா நிகழ்ச்சிகளுக்கு வரும்போது சிவகார்த்திகேயன் பேண்ட், சட்டை அணிந்து மட்டுமே வருவார். ஆனால் நேற்று பைஜாமா மற்றும் வேஷ்டி அணிந்து வந்திருந்தார். கடந்த பல வருடங்களாகவே நடிகர் தனுஷ் தான் நடிக்கும் படங்களின் ஆடியோ லான்ச்சுக்கு வேஷ்டி கட்டி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்போது அவரது பாணியில் சிவகார்த்திகேயனும் வேட்டி கட்ட தொடங்கியிருக்கிறார் என ரசிகர்கள் பேச துவங்கியிருக்கிறார்கள்.
