தளபதி 69 படத்தில் நான் இல்லை!.. என்னாச்சி தெரியாது!.. நடிகரை புலம்பவிட்ட ஹெச்.வினோத்!...

by சிவா |
thalapathy 69
X

#image_title

Thalapathy 69: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என கொண்டாடுகின்றனர். இவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது அவர்களின் ரசிகர்களுக்கு அது திருவிழாதான். பேனர் வைப்பது, கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது என கொண்டாடுவார்கள்.

படம் சுமாராக இருந்தாலும் எங்கள் தளபதியை திரையில் பார்த்ததே எங்களுக்கு பெரிய சந்தோஷம் என சொல்வார்கள். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கிறார் விஜய். அந்த நம்பிக்கையில்தான் தமிழக வெற்றிக் கழகம் என்கிற ஒரு அரசியல் கட்சியையும் துவங்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: சூர்யாவின் பாலிவுட் கனவை காலி செய்த கங்குவா!.. என்ன ஆச்சுனு இம்புட்டு பண்ணுறீங்க?

அந்த கட்சி தொடர்பாக நடந்த மாநாட்டில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும், பாலிவுட் நடிகர் பாபி தியோலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக வெளியாவதால் பல மொழிகளிலிருந்தும் முக்கிய நடிகர்களை அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள்.

#image_title

ரஜினியின் ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் சில காட்சிகளில் நடித்திருந்தார்கள். அதேபோல், தளபதி 69 படத்திலும் சிவ்ராஜ்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. சமீபத்தில் இதை சிவ்ராஜ்குமாரும் உறுதி செய்திருந்தார்.

ஆனால், இப்போது அவர் படத்தில் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. ஹெச்.வினோத் என்னை தொடர்பு கொண்டு ‘துரதிஷ்டவசமாக இந்த முறை விஜய் படத்தில் நீங்கள் இல்லை. எதிர்காலத்தில் நாம் இணைந்து படம் செய்வோம்’ என சொன்னார். என்ன நடந்தது?. ஏன் திடீரென வாய்ப்பை திரும்ப பெற்றுக்கொண்டார்கள் என தெரியவில்லை. அதேநேரம், தனிப்பட்ட முறையில் இது எனக்கு பிரச்சனை இல்லை’ எனவும் அவர் சொல்லியிருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திலும் சிவ்ராஜ்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story