என் ரசிகர்கள் ரெம்ப பாவம்.! மிகுந்த மன வருத்தத்தில் பேசிய சியான் விக்ரம்.!
ஒரு கதைக்காக ஒரு நடிகர் மிகவும் கஷ்டப்பட வேண்டும் உடல் எடையை ஏற்றி, இறக்க வேண்டும். தனது கெட்டப்பை மாற்ற வேண்டும் இவ்வாறு செய்யும் நடிகர்கலாய் உலக அளவில் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் இந்திய சினிமாவில் இருக்கும் முக்கிய நடிகர் என்றால் அது விக்ரம் தான்.
அந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தை மெனக்கெட்டு நடித்து வருகிறார் விக்ரம். இதனால் ,அவர் திரைப்படங்கள் வருடங்கள் கடந்துதான் ரிலீசாகிறது. விக்ரம் நடித்து கடைசியாக திரையில் வெளியான திரைப்படம் என்றால் 2019 இல் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் தான்.
அந்தப் படத்தை அடுத்து விக்ரம் நடித்த நடித்துள்ள "மகான்" திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இது குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்ட நடிகர் விக்ரம் எனது ரசிகர்கள் ரொம்ப பாவம் கடந்த மூன்று வருடமாக என் படம் தியேட்டரில் வெளியாகவில்லை.
இதையும் படியுங்களேன்- யாரு ஓனர்-னு சொல்லிட்டு போங்கடா.! அட்லீக்கு நடந்த சோகம்.!
மகான் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என அவர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த திரைப்படத்தை எங்களால் தியேட்டரில் வெளியிட முடியவில்லை. அதே OTT தளத்தில் வெளியாகிறது என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.