ட்ரோல்லயே சிக்கமா இருந்தேன்!. இப்ப நான் படுற பாடு இருக்கே!... புலம்பும் எஸ்.ஜே.சூர்யா...

by சிவா |
sj suriya
X

தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் முயற்சி செய்து அது நடக்காமல் உதவி இயக்குனராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி என்கிற முதல் படத்தை இயக்கினார். இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து விஜயை வைத்து குஷி என்கிற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்.

அதன்பின், சில படங்களை இயக்கி அவரே ஹீராவாக நடித்தார். அது கிளிக் ஆகவில்லை. சொந்த படம் எடுத்து கையை சுட்டுகொண்டார். ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். விஜயுடன் அவர் நடித்து வெளியான மெர்சல் படம் ‘எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்திற்கு செட் ஆவார்’ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் அந்த நாலு பேருக்கு லீடர் இவரா? சத்தியமா கேப்டன் இல்லங்க

அப்படி அவர் நடித்து வெளியான மாநாடு, மார்க் ஆண்டனி படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. பெரிய நடிகர்களின் பெரும்பாலான படங்களில் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார்.

இவரை நடிப்பு அசுரன் எனவும் ரசிகர்களை அழைக்க துவங்கிவிட்டனர். இந்தியன் 3, வீர தீர சூரன் என பல படங்களிலும் எ|ஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். ஒருபக்கம், தெலுங்கு படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியது. அந்தவகையில், நடிகர் நானியுடன் நடிப்பில் ‘சரி போதா சரிவாராம்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.

sj suriya

இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஜே.சூர்யா பேட்டி கொடுத்தார். அப்போது அவரை ஒரு பாட்டு பாடும்படி ஆங்கர் கேட்டார். அதற்கு ‘நான் இதுவரைக்கும் எந்த ட்ரோல்லையும் சிக்காம இருந்தேன். ராயன் பட புரமோஷன் தொடர்பா ஒரு பேட்டி கொடுத்தேன்.

அப்போது என்னை ஒரு பாட சொன்னார்கள். நானும் பாடினேன். அவ்வளவுதான் இப்போது வரை அதை வீடியோ மீம்ஸாக போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள். எனவே, நான் பாடவே மாட்டேன்’ என ஜலியாக பேசினர் எஸ்.ஜே.சூர்யா.

இதையும் படிங்க: தளபதியோட வம்புக்கே நிக்கிறீங்களே தலைவா… செப்டம்பரில் இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?

Next Story