Cinema News
நடிப்பு அரக்கனுக்கே 12 மணிநேரம் க்ளாஸ்… இந்த படத்துக்கு இத்தனை ரிஸ்க் தேவையா… வெறியில் விக்னேஷ் சிவன்..
Vignesh Shivan: விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தின் வேலைகள் படு பிஸியாக தொடங்கி இருக்கும் நிலையில், புது ரூட் போட்டு இருக்கிறதாம் படக்குழு. இதுகுறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா போட்டு இருக்கும் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை தொடர்ந்து அஜித்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் தகவல் கோலிட்டை பரபரப்பாக்கியது. கமர்சியல் அஜித்தை பார்க்கலாம் என எதிர்பார்த்து இருந்த நிலையில், அவரின் கதை அஜித்துக்கு திருப்தி இல்லாமல் இயக்குனரை படத்தினை விட்டு தூக்கினார்.
இதையும் படிங்க: ஜெனிக்கே தெரியாம விவகாரத்தா..? ஏனுங்க சாமி இப்படி..? அடுத்து வெடிக்க தயாராகும் எழில் வாழ்க்கை..!
இதில் விக்னேஷ் சிவனுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாம். இதனை தொடர்ந்து வெளிவந்த லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்க அதன் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதனை தன்னுடைய ஹீரோவாக்கினார். அதன் அதிகாரப்பூர்வ முதல் அறிவிப்பையே பேரீச்சைப்பழம் கொடுத்து டேட் கொடுத்ததாக இருவரும் அறிவித்தனர்.
இப்படத்தில் நயன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் எனப் பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.
இதையும் படிங்க: எல்லாருக்கும் செஞ்சிட்டா அப்போ நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா.. அஜித் அதிரடியாக எடுத்த முடிவு..!
நேற்று மதியம் 3 மணி முதல் அதிகாலை 3 மணி வரை LIC க்காக 12 மணிநேர தொடர்ச்சியான ஒர்க் ஷாப் இருந்தது. எனக்கும், ப்ரதீப்புக்கும் அருமையான செஷன் இது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்துக்கு அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். ஜாலியான, பன் நிறைந்த இந்த புதுயுக காதல் உலகுக்கு நம்மை அழைத்து செல்ல இருக்கிறார். முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.