எஸ்.கே.23-ல் அந்த ஹீரோயினை தேர்வு செய்தது எதற்காக? இயக்குனர் போட்ட பக்கா பிளான்...
தமிழ்ப்பட உலகின் அதிரடி இயக்குனராக களம் இறங்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் சமீபத்தில் தெலுங்குப் பட நாயகன் மகேஷ் பாபுவை வைத்து எடுத்த ஸ்பைடர் படம் படுதோல்வியைத் தழுவியது. அதனால் அவர் ஏற்கனவே போட்ட திட்டம் தவிடுபொடியானது. தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்க திட்டமிட்டு இருந்தாராம். ஸ்பைடரின் தோல்வியால் அந்த ஹீரோக்கள் தப்பியது தலை என்று எஸ்கேப் ஆகிவிட்டார்களாம்.
தமிழ்ப்படங்களில் சர்கார், தர்பார் இவருக்கு பெரிய அளவில் வெற்றியைத் தரவில்லை. அதனால் நிறைய இடைவெளி விழுந்தது. தற்போது மீண்டும் 6 வருட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் படம் ஒன்றை இரு மொழிகளில் இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர். தெலுங்கிலும் இவரது படங்கள் டப் செய்யப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது முருகதாஸின் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடி ஒரு தெலுங்கு நடிகை. சப்த சாகரலு தாடி படத்தில் நடித்த ருக்மணி வசந்த் என்பது தெரியவந்துள்ளது.
எஸ்.கே.23 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படம் சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்;ததாக இருக்குமாம். அனிருத் இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கும் தொடர் படங்களின் தோல்விக்குப் பிறகு பொங்கலுக்கு வெளியான அயலான் படம் தான் கொஞ்சம் புத்துணர்ச்சியைத் தந்துள்ளது. அந்த சூட்டோடு சூட்டாக ஒரு ஹிட் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்துள்ளார். இந்தக் கூட்டணி இணையும் முதல் படம் இதுதான் என்பதால் இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. மாஸ் காட்டுமா இந்தக் கூட்டணி, ஸ்பைடரின் தோல்வியால் விட்ட இடத்தை ஏ.ஆர்.முருகதாஸ் பிடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.