சமீபத்தில் சிவகார்த்திகேயன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இல்ல பொங்கல் விழாவில் கலந்து கொண்டது பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஏற்கனவே அவர் நடித்த பராசக்தி திரைப்படம் சர்ச்சையாகி வரும் நிலையில் இப்போது மோடி தலைமையில் நடந்த அந்த பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டது பல பேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறும்பொழுது இந்த சூழ்நிலையில் அஜித் சொன்னது தான் ஞாபகம் வருகிறது என தனது பேச்சை தொடங்கினார் வலை பேச்சு அந்தணன். ஒரு முறை கலைஞருக்கு பாராட்டு விழா வைத்த போது எங்களை வற்புறுத்தி இந்த விழாவிற்கு அழைத்து வருவதாக கருணாநிதி இருக்கும் மேடையிலேயே மிக தைரியமாக கூறினார் அஜித்.
அது அப்போதைய காலகட்டத்தில் பெரிய சர்ச்சையாக மாறியது. அந்த நேரத்தில் ரஜினி மட்டும் இல்லையென்றால் அஜித்தை காப்பாற்றி இருக்கவே முடியாது. இப்போது அந்த சூழ்நிலையில் தான் இருக்கிறாரோ சிவகார்த்திகேயன் என நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. கருத்தியல் ரீதியாக ஒரு சில நடிகர்கள் வேறுபட்டு இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன சொல்கிறதோ அதைக் கேட்க வேண்டிய சூழ்நிலையில்தான் ஒரு தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். அப்படித்தான் சிவகார்த்திகேயன் மாட்டிக் கொண்டார் என எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் நேற்று மத்திய அமைச்சர் எல் முருகன் அவருடைய வீட்டில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.
அங்கு மோடி வந்திருந்தார். இது ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிற ஒரு நிகழ்ச்சி. எல்லா வருடங்களிலும் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ் தவறாமல் கலந்து கொள்வார். இதில் ஜிவி பிரகாஷ் ஒரு காலத்தில் பேசிய சித்தாந்தங்கள் இப்போது பிஜேபியுடன் அவர் இணைந்து இருப்பதை பார்க்கும் பொழுது இன்னும் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பராசக்தி திரைப்படம் வந்து மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நான் நினைத்தது என்னவெனில் பராசக்தியின் கதை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் அந்தக் கருத்து எழுப்ப வேண்டிய எல்லா பிரச்சனைகளையும் சுதா கொங்கரா மீதும் சிவகார்த்திகேயன் மீதும் தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தும் படி அவர்களே நடந்து கொண்டனர்.
அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஒருபுறம் சுதா கொங்கரா விஜய் ரசிகர்களை குண்டர்கள் என்றும் ரவுடிகள் என்றும் சொன்னது பெரிய எரிச்சலை விஜய் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயன் விஜய் மோதல் நடந்து கொண்டிருக்கும் பொழுது அதற்கு காரணம் என்ன என்பது மக்களுக்கு தெரியும் .சிவகார்த்திகேயன் ‘நான் விஜய் கிட்ட பேசினேன்’ என்ற ஒரு பொய்யை சொன்னதன் மூலம் மிகப்பெரிய தீயாக இது பரவியது. இதன்பிறகு விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது ஒரு கருத்தை வைத்தனர். ஏற்கனவே 14ஆம் தேதி வெளியாக வேண்டிய படம். முன்னதாக பத்தாம் தேதியே வெளியானதில் மேலும் சிவகார்த்திகேயன் மீது விஜய் ரசிகர்களுக்கு அதிக கோபம் வரக் காரணமாக இருந்தது.
இதில் சுதா கொங்கராவின் பேச்சு தான் விஜய் ரசிகர்களை மொத்தமாக எரிச்சலடைய வைத்தது. யார் தடுத்தாலும் சூரியன் உதயமாவதை நிறுத்த முடியாது. அதைப்போல ஆயிரம் விமர்சனங்களை தடுத்து நிறுத்தினாலும் நல்ல படங்கள் ஓடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படித்தான் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுதா கொங்கரா இப்படி ஒரு மோசமான கருத்தை பொதுவெளியில் வைக்கும் பொழுது பராசக்தி படத்திற்கு மேலும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயனை பொருத்தவரைக்கும் அவர் மீது ஒரு பிராண்டை குத்திவிட்டனர் .
அவர் திமுக நடிகர் என்று ஒரு டேக் அவர் மீது இருக்கிறது. ஏனெனில் இந்தப் படத்தின் கருத்து திமுக கருத்து. இந்தி திணிப்பை எதிர்ப்பது என்பது திமுகவின் கருத்து. அந்தக் கருத்தை நாம் தவறு என சொல்ல முடியாது.ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அந்தக் கருத்தின் அடிப்படையில் ஒரு படம் வரும் பொழுது சிவகார்த்திகேயன் திமுக விசுவாசி என்ற பிம்பம் உருவாகிவிட்டது. அந்த பிம்பத்தை உடைக்க வேண்டிய கட்டாயமும் சிவகார்த்திகேயனுக்கு இருந்தது ,அதற்கு பொருத்தமா பிஜேபி யிலிருந்து ஒரு அழைப்பு சிவகார்த்திகேயனுக்கு வருகிறது, இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்ட சிவகார்த்திகேயன் அப்பாசாமி என்னை காப்பாத்திட்டீங்க என்று அங்கு போன பிறகு சிங்கத்துக்கு பயந்து புலி குகையில் மாட்டிய கதையாக கடைசியில் மாறிவிட்டது .திமுக உணர்வாளராக இருந்தாலும் கூட ஓரளவு அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சிவகார்த்திகேயன் எல்லை தாண்டி அவர்களிடம் போய் இணைந்தது இன்னும் கடுப்பாகி அவரை அடிக்க ஆரம்பித்து விட்டனர். இதுதான் அவருடைய துரதிர்ஷ்டம் என்று வலைப்பேச்சு அந்தணன் பேசியுள்ளார்.