Categories: latest news

கோட் படத்தில் எஸ்கே எண்ட்ரியால் பற்றிக்கொண்ட சர்ச்சை… கடுப்பில் முன்னணி நடிகர்கள்

GOATMovie: விஜய் நடிப்பில் நேற்று வெளியான கோட் திரைப்படத்தில் முக்கிய கேமியோ ரோலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஆனால் தற்போது இது கோலிவுட்டின் மற்ற முன்னணி நடிகர்களிடம் புயலை கிளப்பி விட்டு இருக்கிறது.

இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன் கூறுகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கோட். படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கிறார். சினேகா, லைலா, மீனாட்சி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: விஜய் மேல் மகனுக்கும், மகளுக்கும் அப்படி என்ன கோபம்? குடைந்து எடுக்கும் பயில்வான்

அது மட்டுமல்லாமல் இப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை திரிஷா இருவரும் கேமியோ ரோலில் நடித்திருப்பது மிகப்பெரிய அளவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதில் திரிஷா விஜயின் ஆஸ்தான நடிகை என்பதால் அவரை கொண்டாடி வருகின்றனர்.

அதே வேளையில் ஒரு காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜயுடன் பேசுவது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் சிவாவிடம் விஜய் ஒரு பொருளை கொடுத்து விட்டு செல்ல நீங்க பெரிய வேலைக்கு போறீங்க நான் இந்த சின்ன வேலையை பார்த்துக்கிறேன் என டயலாக் பேசுவார். அதற்கு விஜய் உன்னை நம்பி ஆயிரக்கணக்கான பேரை விட்டு விட்டு செல்கிறேன் எனவும் கூறியிருப்பார்.

இதை மேலோட்டமாக பார்க்கும்போது சினிமா காட்சி போல தான் இருக்கும். ஆனால் பெரிய வேலையாக அரசியலுக்கு செல்லும் விஜய் கோலிவுட்டை சிவாவின் கையில் கொடுத்துவிட்டு செல்வது போல அமைக்கப்பட்டிருக்கும். இதை தன்னுடைய அடுத்த பட ஹீரோவிற்காக வெங்கட் பிரபு செய்ததாக கூறினாலும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு செய்ய விஜய் சாதாரண நடிகர் இல்லை.

இதையும் படிங்க: வேண்டாம் வந்துராதீங்க.. ரொம்ப கஷ்டப்பட்டு வெளியில வந்தோம்… கண்ணீர்விடும் விஜய் ரசிகர்கள்

தன்னுடைய திரை நண்பர்களுக்கு உதவி என கேட்டு வரும்போது தயங்காமல் செய்பவர்தான் நடிகர் விஜய். தற்போது அதே ரூட்டில் நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் படக்குழுவுடன் இணைந்து அதை ரிலீஸ் செய்யும் வரை அயிராமல் பாடுபட்டு வருகிறார்.

படத்தை ரிலீஸ் கடனை வாங்கி அதை அடைக்க இன்னொரு படம் என இங்கே சம்பாரிப்பதை இங்கையே இறக்குகிறார். இதை நடிகர் விஜயும் பல வருடங்களாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அரசியலுக்கு செல்லும் விஜய் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்ற ஆசையிலேயே இதை செய்திருக்கலாமாம்.

ஆனால் இது விஜயின் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் பிரபல நடிகர்களுக்கு புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக ஒரு நடிகர் தானாக வெளியேறும் போது அது பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தாது. அதுவே தன்னுடைய இடத்தில் இன்னொருவர்தான் எனக் கூறிவிட்டு செல்லும்போது அவரின் ரசிகர்களும் அதையே பின்பற்றுவார்கள்.

இதையும் படிங்க: போட்டியே வேணாம்… தனியா இறங்கணும்.. ரிலீஸில் கங்குவா டீமின் பக்கா ப்ளான்

அப்படி இருக்க தற்போது சிவகார்த்திகேயனை விஜய் கைகாட்டி விட்டதால் அவருடைய ரசிகர்களும் சிவாவிற்கு இனி பெரிய அளவில் ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டில் இதனால் அஜித்குமாருக்கு போட்டியாக சிவகார்த்திகேயனை விஜய் ரசிகர்கள் தூக்கி நிறுத்திப் பேசவும் வாய்ப்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

அஜித் தன்னுடைய போட்டியாளராக சிவாவை எப்படி எதிர்கொள்வார். ஏனெனில், அஜித்தை போல சிவாவும் யாருடைய துணையும் இல்லாமல் கோலிவுட்டிற்குள் வந்தவர்.  தற்போது கிடைத்த இந்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் சரியாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா இல்லை தவற விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Akhilan

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

4 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

6 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

6 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

24 hours ago