சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
காதல் கலந்த காமெடி படங்கள்தான் சிவகார்த்திகேயனின் ரூட்டாக இருந்தது. அப்படி தொடர்ந்து நடித்தாலும் இடையிடையே ஹீரோ, வேலைக்காரன் போன்ற சீரீயஸான கதைகளிலும் நடித்துப் பார்த்தார். ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை. எனவே மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பினார்.
அமரன் திரைப்படத்தின் வெற்றி அவரை மீண்டும் ஒரு சீரியசான ஹீரோவாக மாற்றியது. அதேநேரம் அவர் அடுத்து நடித்து வெளியான மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் அவரின் அடுத்த படம் பற்றி பேசியிருக்கிறார்.
இப்போது என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ஒரு முழு நீள காமெடி கதையை சொல்வதே இல்லை. எல்லாமே சீரியஸாக இருக்கிறது. ஏன் இப்போது காமெடி படங்களை செய்வதில்லை என எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.. சரியான கதை அமையவில்லை என்பதே நிஜம்..
ஒரு படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள், பணம் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது.. பராசக்தியும்ம் அமரனும் என்னை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டியது. அதேநேரம் காமெடியை நான் எப்போதும் விடமாட்டேன்.. கண்டிப்பாக எனது அடுத்த படம் ஒரு முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்’ என தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.