இனிமே என் ரூட்டே வேற! தொடர் வெற்றிக்கு பிறகு சூரி எடுத்த அதிரடியான முடிவு
தமிழ் சினிமாவில் இப்போது சூரி ஒரு அதிரடியான விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு வரை ஒரு காமெடி தனமான காட்சிகளில் நடித்து தன்னுடைய நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவர் சூரி. ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த சூரி ஒரு சில படங்களில் ஓரமாக நிற்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் .அதன் பிறகு அவருக்கு வெண்ணிலா கபடி குழு என்ற படம் தான் ஒரு அடையாளமாக மாறியது.
அந்த படத்தில் அவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரும் வந்தது. அதன் பிறகு தான் சூரி என்பவர் யார் என இந்த திரையுலகிற்கு தெரியவந்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ஒரு புகழ்பெற்ற காமெடி நடிகராக வளர்ந்தார் சூரி.
அதன் பிறகு அஜித் கார்த்தி என பல பெரிய பெரிய நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்குள்ளும் ஒரு ஹீரோ இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கையை கொடுத்தவர் வெற்றிமாறன். விடுதலைப் படத்தில் அவரை முதன் முதலில் ஹீரோவாக களமிறங்க வைத்தார் வெற்றிமாறன்.
அந்த படத்தில் அவருடைய அதிரடியான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதன் பிறகு ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தமானார். அதில் சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
மேலும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி சூரி ஹிரோவாக நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று வருவதால் இனிமேல் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் வெளியாக இருக்கிறது.
கதையின் நாயகனாக நடித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இனி இந்தப் பாதையிலேயே போகலாம் என முடிவெடுத்திருக்கிறேன் என சூரி கூறியிருக்கிறார்.