விஜய் பட டைட்டிலை உருவாக்கிய ரஜினி மகள்!.. இதுக்கா செல்லங்களா இப்படி அடிச்சிக்கிட்டீங்க!..

0
546
vijay

Actor vijay: சிறு வயது முதலே ரஜினி ரசிகராக வளர்ந்தவர்தான் நடிகர் விஜய். சிறு வயது முதலே விஜய் அதிகம் விரும்பி பார்க்கும் படங்கள் ரஜினியின் படங்கள்தான். அவரை பார்த்து பார்த்துதான் விஜய்க்கும் நடிகனாக வேண்டும் என்கிற ஆசையை வந்தது .ஆனால், அவரின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அதை ஏற்கவில்லை. ஆனால், விஜய் அதில் உறுதியாக இருந்ததால் சினிமாவில் மகனை ஹீரோவாக வைத்து படமெடுத்தார்.

துவக்கத்தில் தான் நடிக்கும் படங்களில் ரஜினி போஸ்டரை பின்னால் ஒட்டி நடனமாடியவர்தான் விஜய். விஜய் மட்டுமல்ல அஜித்தும் இதை செய்திருக்கிறார். ரசிகர்களின் கைத்தட்டலுக்காக விஜய் அப்படிப்பட்ட காட்சிகளில் நடித்திருக்கிறார். யாரிடம் பேசினாலும் ரஜினியை தலைவர் என்றுதான் சொல்லுவார். அதாவது ‘படம் பார்த்தேன்.. தலைவரு கலக்கிட்டாரு’ என்றுதான் சொல்லுவார்.

இதையும் படிங்க: வெற்றிமாறனின் அடுத்த 7 படங்கள்!. தரமான சம்பவம் பண்ண காத்திருக்கும் தளபதி விஜய்…

ஆனால், இப்போது விஜய் பெரிய ஹீரோவாக உருவாகி அவரின் படங்கள் வசூலில் கோடிகளை வசூலிப்பதாலும், சில படங்களில் ரஜினியை விட அதிக சம்பளம் பெற்றதாலும் அவரை சூப்பர்ஸ்டார் என சிலர் பேச துவங்கினர். இது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த சமூகவலைத்தளங்களில் அவர்கள் விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்டார்கள்.

விஜய் ஏதோ ரஜினி இடத்தை பிடிக்க ஆசைப்படுவது போல ஒரு தோற்றமும் உருவானது. அதேநேரம், மேடையில் அவரை சூப்பர்ஸ்டார் என சிலர் பேசிய போது ‘என் மீது கொண்ட அன்பில் அப்படி பேசுகிறார்கள். எப்போதும் சூப்பர்ஸ்டார் ரஜினி சார் மட்டுமே’ என ஒரு வார்த்தை பேசியிருந்தால் இவ்வளவு பஞ்சாயத்துக்களுக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும்.

இதையும் படிங்க: அஜித் மாதிரியே விஜயையும் மாத்திட்டாங்க! இனிமேல் அவ்ளோதான் – கப்பலையே கவுத்திப்புட்ட கேப்டன்

ஆனால், விஜய் அதை செய்யவில்லை. எப்போதும் இருப்பதுபோல் இதற்கும் மௌனமாக இருந்துவிட்டார். அவர் மனதில் என்ன இருப்பது என்பது யாருக்கும் தெரியவில்லை. பீஸ்ட் படம் உருவானபோது ‘நீ போய் ரஜினி சாரை பார்.. உன்னால் இதை செய்ய முடியும்’ என நெல்சனிடம் சொல்லி அதை துவங்கி வைத்தவரே விஜய்தான். ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு உடனடியாக நெல்சனனை அழைத்து பாராட்டியவர் அவர்தான்.

ஆனால் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் செய்திகளுக்காக விஜய் – ரஜினி மோதலை உருவாக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் எனில் விஜயின் படத்திற்கு ரஜினியின் மகள் டைட்டில் டிசைனை உருவாக்கினார் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், அது உண்மையிலேயே நடந்திருக்கிறது.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா நன்றாக டைட்டில் டிசைன் செய்வார். படையப்பா, பாபா, சந்திரமுகி, அன்பே ஆருயிரே, மஜா, சண்டைக்கோழி, சென்னை 28, சிவாஜி ஆகிய படங்களுக்கு டைட்டில் டிஷைன் செய்தவர். அதேபோல், விஜய் நடித்த சிவகாசி படத்திற்கும் டைட்டிலை டிசைன் செய்தவர் இவர்தான் என்பது பலருக்கும் தெரியாது.

இதையும் படிங்க: தளபதி விஜயை காப்பாற்றி வரும் கவுண்டமணி!.. அவர் மட்டும் இல்லனா!.. விஜயே பகிர்ந்த சீக்ரெட்..

google news