ரஜினி பாட்டைப் பாடியதற்காக வருத்தப்பட்ட எஸ்பிபி... அப்படி என்னதான் நடந்தது?

சில சமயம் நாம நினைக்கிறது ஒண்ணு. நடக்குறது ஒண்ணுன்னு ஆகிவிடும். எல்லாமே நினைச்ச மாதிரி நடந்தா தான் ஒரு பிரச்சனையும் இருக்காதே. அது மாதிரி தான் இந்தப் படத்திலும் நடந்து விட்டது. அதுவும் ரஜினி படம். இளையராஜா மியூசிக். எஸ்.பி.பி. பாட, ரெண்டு பேருமே வருத்தப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வாங்க என்னன்னு பார்க்கலாம்.

S.P.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் கதை எழுத ரஜினிகாந்த், ராதா நடித்த படம் பாயும்புலி. இளையராஜா இசை அமைத்துள்ளார். இதுல 'ஆடி மாசம் காத்தடிக்க' பாடல் செம மாஸா இருக்கும். இந்தப் பாட்டை வாலி எழுதியிருப்பார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி பாடியிருப்பாங்க.

இந்தப்பாட்டுல இளையராஜா பண்ணிய அலப்பறை கொஞ்ச நஞ்சமல்ல. எந்த இடத்துல என்ன சேட்டை இருக்கோ அவ்வளவும் பண்ணியிருப்பார் இளையராஜா. அவருக்கு சேர்ந்த மாதிரி எஸ்பிபியும் பாடியிருப்பாரு.

எந்த இடத்துல என்ன மூடு வருதோ அதை எல்லாம் கொண்டு வந்து வேற லெவல்ல தூக்கி அடிச்சிருப்பாரு எஸ்பிபி. அவரோட ஒப்பிடும்போது எஸ்.ஜானகிக்கு ஸ்கோப் கம்மி தான். இருந்தாலும் கிடைச்ச கேப்ல அடிச்சித் தூள் கிளப்பியிருப்பார்.

இந்தப் பாட்டுல ரஜினி கூட சேர்ந்து சில்க் ஆடுவாங்க. ஆனா எந்த விரசமும் இருக்காது. குத்துப்பாட்டுங்கறதால பல பேருக்கு பல மனநிலையை உண்டாக்கும். இது எனர்ஜியைக் கொண்டு வரக்கூடிய பாட்டு. இந்தப் பாட்டுல வாலி தர லோக்கல்ல இறங்கி அடிச்சி எழுதியிருப்பாரு.

வாலி இந்தப் பாட்டுல அம்மியும் அசங்கற ஆடி மாசம் காத்தடிக்கன்னு வரிகளைப் போட்டுருப்பாரு. அசையறதைத் தான் அசங்கறதுன்னு போட்டுருப்பாரு. இது இலக்கியத்துல உள்ள சொல்.

வாலி இந்தப் பாட்டுல இன்னொரு வித்தியாசமும் பண்ணியிருப்பார். பல்லவி முடியறது, சரணம் முடியறதைக் கவனிச்சா தெரியும். பல்லவியோட தொடக்கத்துல சேர்ந்து வேறு ஒரு பொருளை அழகாக் கொடுக்கும். பல்லவியில முடியும் போது புடவையும் பறக்கிறன்னு முடியும். அதை அப்படியே முன்னாடி கொண்டு வந்தா 'புடவையும் பறக்கிற ஆடி மாசம் காத்தடிக்க'ன்னு வரும்.

அதே மாதிரி 'அம்மியும் அசங்கற ஆடி மாசம் காத்தடிக்க'ன்னு வரும். இன்னொரு இடத்துல உடம்பது வலிக்கிற ஆடி மாசம் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேர்த்தணைக்கன்னு வரும்.

கடைசி வரி என்னன்னா 'மயக்கத்தைக் கொடுக்கற ஆடி மாசம் காத்தடிக்க'ன்னு வரும். இதுல எஸ்பிபி மிமிக்ரி பண்ணி பல குரல்ல பாடி அசத்தியிருப்பார். இப்படி 3 சரணத்துலயும் வித்தியாசம் காட்டியிருப்பார் வாலி. இளையராஜா டிரம்பட்ல வித்தியாசமா ஆரம்பிச்சிருப்பாரு.

Payum puli

Payum puli

இடையிடையே புதுப்புது கருவிகளால் இசையில் விளையாடி இருப்பார். எலெக்ட்ரிக் கித்தார், டிரம்பட்னு பல கருவிகளால் வெரைட்டியான மியூசிக் போட்டு நம்மை குத்தாட்டம் போட வைத்திருப்பார் இளையராஜா.

பாட்டு முழுவதுமே இளமை துள்ளலா இருக்கும். வரிகளும், மியூசிக்கும் போட்டிப் போடும். பாட்டை வேற லெவல்ல பாடினாலும், படத்துல பார்க்கும்போது எஸ்பிபியும், இளையராஜாவும் ரொம்ப வருத்தப்பட்டாங்களாம்.

'நம்ம ஒரு கணக்குல இதைப் பண்ணினோம். ஆனா படத்துல கிளப் டான்ஸ் மாதிரி காட்டிட்டாங்களே'ன்னு. ஆனா நம்ம நினைச்சி பாடுன ஃபீலே படத்துல வரலையேன்னு எஸ்பிபி ரொம்ப வருத்தப்பட்டாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it