Cinema History
ரஜினிக்காக எஸ்.பி.பி மிகவும் கஷ்டப்பட்டு பாடிய பாடல்!.. பெண்டு கழட்டிய இளையராஜா..
ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு பாடியவர்தான் பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். முதல் பாடலே அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ‘ஆயிரம் நிலவே’ பாடல் ஆகும். ஆனால், இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ஜெமினி கணேசனுக்கு ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடலையும் அவர் பாடிவிட்டார்.
எம்.எஸ்.வி இசையில் பல ரம்மியமான பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார். அந்த பாடல்கள் எல்லாமே மனதை வருடம் தேனிசைதான். அதேபோல், இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய அனைத்து பாடலும் தித்திக்கும் தேனமுது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: ஜேசுதாஸ் பாதி.. எஸ்.பி.பி.. பாதி… கலந்து செய்த கவிதை.. யார் அந்தக் காந்தக் குரல் பாடகர்?..
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், மோகன், ராமராஜன் என 80,90களில் முன்னணி நடிகர்களாக இருந்த பலருக்கும் எஸ்.பி.பி. பல நூறு பாடல்களை பாடியிருக்கிறார். இப்போதும் அவர் பாடியல் பாடல்கள்தான் பலரின் கார் பயணங்களிலும் பாடிக்கொண்டிருக்கிறது.பல இசை நிகழ்ச்சிகளிலும் ராஜாவும், பாலுவும் இணைந்து உருவாக்கிய பாடல்களைத்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
திரையுலகில் மூச்சி விடாமல் பாடுவது என்பது பெரிய கலை. அதை எஸ்.பி.பியை தவிர யாரும் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எஸ்.பி.பி மூச்சிவிடாமல் பாடினார் எனில் எல்லோருக்கும் வசந்த இயக்கத்தில் வெளிவந்த கேளடி கண்மணி படத்தில் இடம் பெற்ற ‘மண்ணில் இந்த காதல் இன்றி’ பாடல் என்றுதான் நினைப்பார்கள்.
இதையும் படிங்க: இளையராஜா எச்சரித்தும் அவர் பேச்சை மீறிய எஸ்.பி.பி! அதனால் வந்த பின்விளைவு என்ன தெரியுமா?
ஆனால், அந்த பாடல் உருவாவதற்கு 11 வருடங்களுக்கு முன்பே எஸ்.பி.பி. ஒரு திரைப்படத்தில் மூச்சிவிடாமல் பாடியிருக்கிறார். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1979ம் வருடம் வெளிவந்த ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் இடம் பெற்ற ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடல்தான். இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார்.
தொழில் நுட்பம் பெரிதாக வளராத அந்த காலத்தில் மிகவும் சிரத்துடன், நேர்த்தியாக இளையராஜா இந்த பாடலை உருவாக்கியிருப்பார். எஸ்.பி.பி இந்த பாடலை எப்படி பாடியிருப்பார் என்பதை கேட்டு பாருங்கள்.. உங்களுக்கே புரியும்.
இதையும் படிங்க: ச்ச! இப்படி ஒரு ஆசையில் இருந்திருக்காரே! நிறைவேறா ஆசையில் நம்மை விட்டுச் சென்ற எஸ்.பி.பி