எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா!.. அட தெரியாம போச்சே...

spb
இளையராஜா சினிமாவில் நுழைவதற்கு முன்பே பாடகராக ரசிகர்களிடமும், சினிமா உலகிலும் பிரபலமாகியிருந்தவர் எஸ்.பி.பி. ஏனெனில், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் போன்ற சில நடிகர்களுக்கு அவர் பாடல்களை பாடியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.
அப்போதுதான் அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் இளையராஜா. அதன்பின் அவரின் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. 80,90களில் வெளிவந்த 95 சதவீத திரைப்பட பாடல்களில் பாடியது அவர்தான். அதனால்தன 30 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் அவரால் பாடமுடிந்தது.
இதையும் படிங்க: வாலியை கொசு என எழுதிய பத்திரிக்கையாளர்!. அவரிடம் வாலி சொன்ன கமெண்ட்டுதான் ஹைலைட்!..
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கும், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, மோகன், கார்த்திக், சத்தியராஜ், சரத்குமார் போன்ற நடிகர்களின் படங்களில் அதிக பாடல்களை பாடியது அவர்தான். இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தார்.

spb
நடிகர் மோகனுக்கு இவர் பாடிய பல பாடல்கள் சாகா வரம் பெற்றவை. இப்போதும் அந்த பாடல்கள் ரசிகர்களால் ரசித்து கேட்டு வருகிறார்கள். பாடகராக மட்டுமில்லாமல் பல படங்களில் எஸ்.பி.பி. நடித்தும் இருக்கிறார். அதேபோல், சில படங்களை அவர் தயாரித்தும் இருக்கிறார்.
இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..
ஆனால், அவருக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது பலருக்கும் தெரியாது. பாடுவதை கொஞ்ச காலம் நிறுத்திவிட்டு ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து இயக்கம் தொடர்பான தொழில் நுட்ப விஷயங்களையெல்லாம் கற்றுக்கொண்டு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது.
ஆனால், கடைசிவரை அந்த ஆசை அவருக்கு நிறைவேறவில்லை. 2020ம் வருடம் செப்டம்பர் மாதம் அவர மரணமும் அடைந்தார். அவரின் மரணம் இசை ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் அவரின் மரணத்திற்கு பொதுமக்களே இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.