ஓ இதுக்கு தான் அந்த உருட்டா… ஸ்டார் படத்தில் கவின் வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?
Kavin: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பதித்து இருக்கும் கவின் ஸ்டார் படத்தின் மூலம் உச்சம் அடைந்து இருக்கிறார். இப்படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் தற்போது வைரலாக பரவத் தொடங்கி இருக்கிறது.
சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் கவின். இதையடுத்து வேட்டையன் என்னும் கேரக்டரில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். வில்லன் வேடம் என்றாலும் பின்னர் அது ஹீரோ ரோலாக மாற்றப்பட்டது. தொடர்ச்சியாக பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க: இளையராஜாவுடன் சண்டை!. வாய்ப்பில்லாமல் ஈ ஓட்டிய வைரமுத்து!.. கடவுள் மாதிரி வந்த வாய்ப்பு!…
சினிமா வாய்ப்பும் தொடர்ச்சியாக கிடைத்தது. லிப்ட் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸானது. ஆனால் மிகப்பெரிய அளவில் ஹிட் படமாக அமையவில்லை. இதையடுத்து டாடா படத்தில் நடித்தார். மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. கவின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. ஸ்டார், கிஸ் மற்றும் பிளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஸ்டார் திரைப்படம் நேற்று ரிலீஸானது.
கோலிவுட்டுக்கு இந்த வருடம் பெரிய அளவில் ஹிட் படம் அமையாத நிலையில் ஸ்டார் நல்லதொரு தொடக்கத்தினை கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கவின் மற்றும் லால் இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. முதல் நாள் வசூல் 3 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் கவினுக்கு சம்பளமாக 2 கோடி கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: வியாபாரம் இல்லைங்க! ‘கோட்’ பட ஆடியோ லாஞ்சில் இப்படி ஒரு பிரச்சினையா?
பெரிய சம்பளம் கவின் கேட்பதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் நம்முடைய முதல் புரோஜக்ட் வெற்றி தான் சம்பளத்தினை தீர்மானிக்கும். முதலில் 2 ஆயிரம் வாங்கினேன். அப்படியே வரவேற்பு கிடைக்க அந்த தொடரிலே எனக்கு 6 வரை சம்பளமாக கொடுத்தனர். அதனால் சம்பளம் எகிறிக்கொண்டு தான் இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது ஸ்டார் ஹிட்டை தொடர்ந்து மேலும் அவர் சம்பளம் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.