முதன் முதலில் சரக்கடித்தபோது கண்ணதாசனுக்கு நேர்ந்த அனுபவம்!.. அந்த அறிவுரையை மட்டும் கேட்டிருந்தா!..

by சிவா |   ( Updated:2024-02-20 11:02:13  )
kannadasan
X

50,60களில் தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியராக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். துவக்கத்தில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவகவும் சினிமாவில் நுழைந்தார். எம்.ஜி.ஆர் நடிகராவதற்கு முன்பே சினிமாவில் எழுத துவங்கியவர் கண்ணதாசன். எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்துக்கு வசனம் எழுதியவரும் கண்ணதாசன்தான்.

ஆனால், பாடலாசிரியராகத்தான் அவர் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். காதல், கண்ணீர், சோகம், ஏமாற்றம், அழுகை, விரக்தி, ஏமாற்றம் நம்பிக்கை என மனித வாழ்வின் அத்தனை உணர்வுகளையும் தனது பாடல்களில் பிரதிபலித்தவர் இவர். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் பாடல்களை எழுதி இருக்கிறார்.

இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

பத்திரிக்கையாளர், கவிஞர், நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். இப்போதும் இவரின் வரிகள் காற்றில் எங்கோ ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. கண்ணதாசனுக்கு மதுப்பழக்கம் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். இதை வைத்தே அதிகம் விமர்சிக்கப்பட்டவர் இவர்.

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களையும் செய்து கொண்டார். ‘மது, மாது இருவருடன் மகிழ்ச்சியாக இல்லாமல் போனால் இறைவன் என்னை திட்டுவான்’ என பகீரங்கமாக சொன்னவர் இவர். தன்னுடைய மதுப்பழக்கத்தை அவர் யாரிடமும் மறைத்தது இல்லை. அந்த பழக்கமே அவரின் உடல்நலத்தை பாதித்தாகவும் சொல்லப்படுவதுண்டு.

இதையும் படிங்க: வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. எம்ஜிஆர் சொன்னது இதுதான்!..

ஒருமுறை நண்பர்கள் வற்புறுத்தியதால் மது அருந்தும் விடுதிக்கு சென்றார் கண்ணதாசன். அங்கு கம்பதாசன் என்பவரை கண்ணதாசனுக்கு அவரின் நண்பர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். கம்பதாசன் கண்ணதாசனிடம் ‘இதற்கு முன்பு குடித்திருக்கிறீர்களா?’ என கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணதாசன் ‘இல்லை. இதுதான் முதன் முறை’ என பதில் சொல்லியிருக்கிறார்.

அதற்கு கம்பதாசன் ‘நீங்க மதுவை தொடாதிர்கள். ஒருமுறை தொட்டால் அது உங்களை விடாது’ என அறிவுரை சொல்லி இருக்கிறார். ஆனால், ‘இல்லை இன்று மட்டும்தான். இனிமேல் குடிக்க மாட்டேன்’ என கண்ணதாசன் அவரிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், அதை அவரால் பின்பற்ற முடியவில்லை. கம்பதாசன் சொன்னதுதான் நடந்தது.

Next Story