இதனால் தான் சிம்பு மீண்டும் ப்ரேக்கில் இருக்கார்.. மன்மதன் படத்தினை தொடர்ந்து STR48ல் நடக்க இருக்கும் விஷயம்…!

Published on: December 25, 2023
---Advertisement---

STR48: நடிகர் சிம்பு நடிப்பில் பத்து தல படம் ரிலீஸாகி ஒரு வருடத்தினை கடந்துவிட்ட நிலையில் அடுத்த படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்காத விஷயத்துக்கான ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து கொண்டு இருந்த சிம்பு ஹீரோவாக அறிமுகமானார். முதல் சில படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க அவருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது. நிறைய ரசிகர்கள் அவரை ரசிக்க தொடங்கினார். வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். வல்லவன் படத்தினை இயக்கி அதிலும் நல்ல பெயர் எடுத்தார்.

இதையும் படிங்க: அது புல்லினா நீங்க பண்ணதும் புல்லிதான்! பிக்பாஸை வெளுத்து வாங்கிய பூர்ணிமா

ஆனால் அங்கு வந்தது வினை. நயனுடனான காதலால் எக்கசக்க தொல்லை உருவானது. இருவருக்கும் ப்ரேக்கப் வேறு நடக்க தலைவர் இந்தியாவை விட்டே எஸ்கேப். ஒரு சில மாதங்கள் யார் கண்ணிலும் படாதவர். பின்னர் ஒருவழியாக மீண்டு வந்தார். அதை தொடர்ந்து ஹன்சிகாவுடனான காதல் அவருக்கு பிரச்னையே கொடுத்தது.

ஒரு கட்டத்தில் சிம்பு எக்கசக்கமாக உடல் எடை அதிகரித்து அவ்வளவு தான் கேரியர் காலி என பேச்சுகள் எழுந்தது. ஆனால் அதை உடைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு என வரிசையாக ஹிட் கொடுத்தார்.

பத்து தல படம் வசூலில் சற்று குறைவு என்றாலும் பெரிய ரீச்சை தான் கொடுத்தது. ஆனால் அந்த படத்தினை தொடர்ந்து சிம்பு தற்போது எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவில்லை. இவர் அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இதையும் படிங்க: அசல் பட நடிகையை திடீரென சந்தித்த அஜித்! பாத்ததும் சாரி கேட்ட தல – என்னவா இருக்கும்?

அவரே இரண்டு ரோலில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காக உடல் எடை போடும் பணிகளிலும் சிம்பு ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் மன்மதன் படத்தில் தான் இரட்டை வேடம் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.