Connect with us
ajith

Cinema News

அசல் பட நடிகையை திடீரென சந்தித்த அஜித்! பாத்ததும் சாரி கேட்ட தல – என்னவா இருக்கும்?

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார். ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ஒரு பெரும் உச்ச நட்சத்திரமாக மாறியிருக்கிறார் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்து முழு மூச்சுடன் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது,

இதையும் படிங்க: அது புல்லினா நீங்க பண்ணதும் புல்லிதான்! பிக்பாஸை வெளுத்து வாங்கிய பூர்ணிமா

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேரும் படமாக த்ரிஷாவுக்கு விடாமுயற்சி திரைப்படம் அமையும். படத்தில் அர்ஜூன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்,

இந்த நிலையில் இன்று அஜித்தின் ஒரு வீடியோ இணையத்தில் திடீரென வைரலானது. அதில் அசல் படத்தில் நடித்த பாவனா திடீரென அஜித்தை வந்து சந்தித்திருக்கிறார். தமிழீல் பாவனாவுக்கு என்ற தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன.

இதையும் படிங்க: லேடி சூப்பர்ஸ்டாரா? நீங்களாம் லாயக்கே இல்லை..! படப்பிடிப்பில் எக்கச்சக்க தொல்லை.. நயனின் லீலைகள்..!

அசல் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாவனா நடித்திருப்பார். பிங்க் நோட் படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு வந்த பாவனா வந்த இடத்தில் அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார். பாவனாவை பார்த்ததும் அஜித் சாரி என கேட்டிருக்கிறார்.

ஏனெனில் அஜித் வந்ததே தாமதமாகத்தான் வந்தாராம். ஆனால் பாவனா அதற்கு  ‘பரவாயில்லை. நீங்கள் லேட்டா வருவீர்கள் என்று சொன்னதும் நானும் லேட்டா வர்லானுதான் வந்தேன்’ என்று பதில் கூறிய அந்த வீடியோதான் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: விடாமுயற்சியும் இதானா? ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. துணிவுக்கு பின்னர் அஜித் எடுத்த முடிவு…!

google news
Continue Reading

More in Cinema News

To Top