சிம்புவின் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியான STR48 போஸ்டர்.. கமல் சும்மா கலக்கிட்டாரு!..
Str48 poster: தமிழ் திரையுலகில் சர்ச்சை நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் மீது எப்போதும் பல புகார்கள் உண்டு. படப்பிடிப்புக்கு சரியாக போக மாட்டார், தாமதமாக போவார் என பலரும் சொல்வதுண்டு. அதோடு, படம் பாதி முடியும் நிலையில் திடீரென அப்பாவை தயாரிப்பாளரிடம் அனுப்பி சம்பளத்தை சேர்த்து கேட்பார்.
அதனால்தான் திறமையான நடிகராக இருந்தும் அதிக படங்களில் நடிக்காமல் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பத்து தல. இந்த படம் வெளியாகி 10 மாதங்கள் ஆகியும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவே இல்லை. மாநாடு படத்திற்கு பின் அவர் நடிப்பில் வெளியான 2 படமும் ஓடவில்லை.
இதையும் படிங்க: விஜய்க்கு பெர்சனலா ஒன்னு சொல்லனும்! கட்சி பெயரை அறிவித்ததும் தாய் ஷோபா அனுப்பிய ஆடியோ
கடந்த 10 மாதமாகவே சிம்பு இந்தியாவிலேயே இல்லை. லண்டன் உள்ளிட்ட நாடுகளில் சுற்றியவர் இப்போது துபாயில் இருக்கிறார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்க சிம்பு நடிப்பது என முடிவானது. ஆனால், இந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
ஆனால், இது சரித்திர கதை கொண்ட படம் எனவும், இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு துபாயில் உடம்பை செமையாக ஏற்றிகொண்டிருக்கிறார் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், இந்த படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. சிம்புவுக்கு நாளை 3ம் தேதி பிறந்தநாள் என்பதால் அவரின் ரசிகர்களை குஷிப்படுத்த இந்த போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: காலம் என்னை கொண்டு போகும்!… அரசியல் குறித்து விஜய் அப்போதே இப்படி பேசி இருக்காருப்பா!.. உண்மை தான் போல
ஆங்கிலத்தில் வெளியான 300 படத்தின் போஸ்டரை போல இதை டிசைன் செய்திருக்கிறார்கள். இந்த கதையைத்தான் தேசிங்கு பெரியசாமி ரஜினியிடம் சொன்னார். ஆனால், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தேசிங்கு பெரியசாமி தாங்குவாரா என ரஜினி சந்தேகப்பட்டதன் விளைவு அந்த படத்திலிருந்து தேசிங்கு பெரியசாமி வெளியேற்றப்பட்டார்.
அதன்பின்னர்தான் அந்த கதையை கமலிடம் சொல்லி அவர் தயாரிக்க சிம்பு ஹீரோவாக நடிப்பது என முடிவானது. இப்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.