ஷங்கரின் பிளாஷ்பேக்கில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?!... காமெடி... கிளாப் என வேற லெவலில் சம்பவங்கள்...
நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது. பெரிய பெரிய ஜாம்பவான்களின் வாழ்க்கையை சற்று பின்னோக்கிப் பார்த்தால் அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தெரிய வரும். கடின உழைப்பும், விடாமுயற்சியும், சகிப்புத்தன்மையும், பொறுமையும் இருந்தால் வாழ்வில் எந்த நிலையிலும் சாதிக்கலாம். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் திரையுலகில் நுழைவதற்குள் என்னென்ன பாடு எல்லாம் பட்டார் என்பதைப் பார்ப்போமா...
தமிழ்த்திரை உலகில் தற்போது பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டு இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் முதன் முதலில் தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தான் உதவி இயக்குனராக இருந்தாராம்.
இதையும் படிங்க... அறிவிப்போடு நின்று போன ரஜினியின் திரைப்படங்கள்! மோதலில் முடிந்த திரைப்படத்தின் கதை தெரியுமா?
இது எப்படி நடந்தது என்பது தான் சுவாரசியம். எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர்களில் முக்கிய இயக்குனர் செந்தில்நாதன். இவர் பூந்தோட்ட காவல்காரன் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியவர். ஒருமுறை எஸ்.ஏ.சந்திரசேகரின் நண்பர் தில்லைராஜ் தான் இயற்றிய நாடகத்தைக் காண அழைத்தாராம். அப்போது நாடகத்தின் காமெடி காட்சிகள் எஸ்.ஏ.சி.க்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். அதை யார் எழுதியது என செந்தில்நாதனிடம் கேட்டுள்ளார். அதற்கு ஷங்கரின் முகவரியைக் கொடுத்தாராம்.
அடுத்து வசந்தராகம் படத்தை இயக்கத் தயாராக இருந்தாராம் எஸ்.ஏ.சி. உடனே ஷங்கரை வைத்து காமெடி காட்சிகளை எழுத நினைத்தாராம். இதை அறிந்த ஷங்கரும் தான் உதவியாளராக சேர விருப்பம் என எஸ்ஏசி.யிடம் சொல்ல, செந்தில்நாதனிடம் கேட்டுக்கொள் என்று சொல்லிவிட்டாராம். அப்போது செந்தில்நாதன் அந்தப் படத்திற்கு கிளாப் அடிக்கும் வேலையை ஷங்கருக்குக் கொடுத்தாராம்.
இதையும் படிங்க... கூலி படத்தின் இசை யாருக்கு சொந்தம்?… இளையராஜாவுக்கே பல்ப் கொடுக்கும் சம்பவம்!
அந்தப் படத்தில் கோவை சரளா, ஒய்.ஜி., எஸ்.ஏ.சி. நடித்த காமெடிக் காட்சிகளையும் ஷங்கர் தான் எழுதினாராம். அவரும் இந்தப் படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீன்ஸ், இந்தியன், எந்திரன், ஐ, அந்நியன், 2.0 என பல பிரம்மாண்டமான படங்களை எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது இந்தியன் 2 படத்தைக் களமிறக்க முழுமுயற்சியில் அதற்கான புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பொதுவாக இவரது படங்களில் கிராபிக்ஸ் தூள் கிளப்பும். பார்ப்பதற்கு செம மாஸாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.