தலைவிரித்தாடும் சுசித்ரா விவகாரம்! அடுத்த டார்கெட் விஜய் ஆண்டனி.. ஐய்யோ இது உண்மையா?
Singer Suchithra: சமீப காலமாக சுசித்ரா விவகாரம் தான் சமூக வலைதளங்களில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான பாடகியாக திகழ்ந்து வந்தார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.
அதன் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் ‘சுசி லீக்ஸ்’ என்ற பெயரில் பிரபலங்களின் பல அந்தரங்க வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். ஆனால் அது என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் என் மீது உள்ள கோபத்தால் இந்த மாதிரி எல்லாம் செய்து வருகிறார் என்று தனது தரப்பு நியாயத்தை கூறி வந்த நிலையில் மீண்டும் இது சம்பந்தமான விவகாரம் சூடு பிடித்திருக்கிறது.
இதையும் படிங்க: சிவாஜி மாதிரியே இவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு!.. கவுண்டமணி பெயர் வந்தது இப்படியா?!..
சமீப காலமாக தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, திரிஷா போன்ற பிரபலங்களை பற்றி பல விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் சுசித்ரா. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியையும் அவர் விட்டு வைக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் தற்கொலைக்கு பின்னணியில் இருக்கும் காரணத்தை சுசித்ரா தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகராக வேண்டும் என்பதற்காக விஜய் ஆண்டனி தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அதேபோல அவருடைய மகளும் தன் முகத்தை சர்ஜரி செய்து மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்தாராம். இதைப்பற்றி தனது அப்பா விஜய் ஆண்டனி இடம் பலமுறை கேட்டிருக்கிறார் மீரா. ஆனால் விஜய் ஆண்டனி நாள்களை தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தாராம் .
இதையும் படிங்க: பல்லவி ஹீரோயினு சொன்னதும் ஆடிப்போன ராமராஜன்! ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
இருந்தாலும் அவர் மகள் விடாமல் கேட்க ஒரு கட்டத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி எறிந்து விட்டாராம் விஜய் ஆண்டனி. இதன் காரணமாகவே விரக்தியில் அவருடைய மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார் என்ற ஒரு பெரும் பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார் சுசித்ரா. தன்னை பற்றி யாராவது தவறாக பேசினால் உடனே பதிலடி கொடுக்கும் விஜய் ஆண்டனி சுசித்ராவின் இந்த பேட்டிக்கு தக்க பதிலடி கொடுப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.