Cinema News
கைவிட்ட சூர்யா.. காக்க வைக்கும் தனுஷ்!.. அதனாலதான் அந்த நடிகர்கிட்ட போனாரா சுதாகொங்கரா?!..
மணிரத்தினத்தின் உதவியாளர் சுதா கொங்கரா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் துரோகி. அந்த படம் சரியாக ஓடவில்லை. அதன்பின் 6 வருடங்கள் நேரம் எடுத்து அவர் இயக்கிய படம்தான் இறுதிச்சுற்று. மாதவன் ஹீரோவாக நடித்த இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.
அதன்பின் இதே படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கில் இயக்கினார். அதன்பின் 3 வருடம் கழித்து அவர் இயக்கிய படம்தான் சூரரைப்போற்று. இது உண்மையில் நடந்த கதை என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. சுதா கொங்கராவின் திரைக்கதையிலும் சூர்யாவின் சிறப்பான நடிப்பிலும் இப்படம் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: விஜய் இடத்தை பிடிக்க சரியான ரூட்டை பிடித்த சிவகார்த்திகேயன்! 2026க்குள் இவர்தான் டாப்
இந்த படத்தின் கதை தேசிய அளவில் கவனமும் பெற்றது. அதன்பின் இதே கதையில் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்தார். இப்படத்தையும் சுதா கொங்கராவே இயக்கி இருக்கிறார். ஆனால், இப்படம் இன்னமும் வெளியாகவில்லை. அதன்பின் மீண்டும் அவர் உருவாக்கிய கதைதான் 1965: புறநானூறு.
1965ம் வருடம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை இது. ஆனால், இந்த கதையில் சில மாற்றங்களை சூர்யா செய்ய சொல்ல சுதா கொங்கரா ‘அது முடியாது’ என சொல்லிவிட்டார். எனவே, அப்படத்திலிருந்து விலகிவிட்டார் சூர்யா. ஒருபக்கம், சுதாகொங்கராவின் இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார் தனுஷ்.
இதையும் படிங்க: ஒரு முறை சொல்லிட்டா பின்வாங்குறதே இல்ல! தொடர்ந்து கேப்டன் குடும்பத்துக்காக உதவிக்கரம் நீட்டும் லாரன்ஸ்
ஆனால், 2 வருடங்கள் அவரிடம் கால்ஷீட் இல்லை. அதேநேரம், அவரின் ஆடிட்டருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் தனுஷ். எனவே, அந்த கம்பெனியில் படம் இயக்க சுதாகொங்கரா ஒப்புக்கொண்டால் புறநானுறு டேக் ஆப் ஆகும் என சொல்லப்படுகிறது. இது நடக்குமா என தெரியவில்லை.
அதனால்தான் சிவகார்த்திகேயனும் இதற்குள் துண்டை போட்டு பார்த்திருக்கிறார். எல்லாம் சரியாக அமைந்தால் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறது திரையுலகம். சுதாகொங்கரா என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.