Connect with us
lokesh

Cinema News

செக் வைத்த சன் பிக்சர்ஸ்!.. அடம்பிடிக்கும் லோகேஷ் கனகராஜ்!. தலைவர் 171 என்ன ஆகுமோ!…

மாநாடு, கைதி என கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே கமலின் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கமலின் கேரியலியேயே அதிக வசூலை பெற்ற படமாக விக்ரம் மாறியது.

அதன்பின் மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார் லோகேஷ். இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் இவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை என சொல்லுமளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், படம் வெளியான பின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக லியோ படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களை கவரவில்லை.

இதையும் படிங்க: அஜித் போட்டிருக்கும் முகமூடி! பொங்கி எழுந்து வீடியோவை வெளியிட்டதற்கு இதுதான் காரணமா?

இந்த நிலையில்தான் ரஜினியின் 171வது படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. லியோ போல ஆகிவிடக்கூடாது என முடிவெடுத்துள்ள லோகேஷ் மிகவும் கவனமாக கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறாராம்.

ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பின் லோகேஷ் படத்தில் இணையவிருக்கிறார். சமீபத்தில் இப்படம் தொடர்பான போஸ்டரையும் லோகேஷ் வெளியிட்டார். இந்நிலையில், சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் லோகேஷுக்கு ஒரு மீட்டிங் நடந்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹசாதான் ரஜினி 171 படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஆனல், பீஸ்ட் படம் உருவானபோது வெளிப்புற படப்பிடிப்பு செலவு ரூ.12 கோடி வரை அதிகரித்துவிட்டதாம். இதற்கு காரணம் மனோஜ் பரமஹம்சாதான் என்பது சன் பிக்சர்ஸின் புகார்.

இதையும் படிங்க: KPY பாலா செய்யும் உதவியால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை… ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலையே!

எனவே, இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா வேண்டாம் என லோகேஷ் கனகராஜிடம் சன் பிக்சர்ஸ் சொல்லி இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்த போகிறேன். இதற்கு அவர்தான் சரியான ஆள் என லோகேஷ் சொல்ல அதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது சன் பிக்சர்ஸ்.

ஏனெனில் ஐமேக்ஸ் கேமராவை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரவேண்டும். அதை ஆபரேட் செய்ய 10 பேர் வருவார்கள். அவர்களுக்கான விமான டிக்கெட், தங்கும் செலவு என பட்ஜெட் எகிறும். எனவே, அதற்கும் அதிருப்தியை தெரிவித்திருக்கிறது சன் பிக்சர்ஸ். எனவே, என்ன செய்வது என முழித்து வருகிறாராம் லோகேஷ் கனகராஜ்.

google news
Continue Reading

More in Cinema News

To Top